டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 அறிமுக விபரம் வெளியானது

0

tvs draken

டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ கூட்டணியில் அடுத்த ஒரு மாடலை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவன தலைமை செயல் அதிகாரி கே.என். ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார். அனேகமாக அந்த மாடல் ஆர்டிஆர் 310 ஸ்போர்ட்டிவ் நேக்டூ வெர்ஷனாக இருக்கலாம்.

Google News

கடந்த 2013 ஆம் ஆண்டு உருவான பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் இடையே ஏற்பட்ட கூட்டணியில் உருவான முதல் மாடலான பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் போன்றவை விற்பனை செய்யப்படும் நிலையில், டிவிஎஸ் சார்பாக சமீபத்தில் முற்றிலும் மேம்பட்ட பிஎஸ்6 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக டிவிஎஸ் சிஇஓ குறிப்பிடுகையில், சமீபத்தில் விற்பனைக்கு வந்த அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடலின் அடிப்படையில் ஒரு கூடுதலான மாடல் விற்பனைக்கு 2021 ஆம் ஆண்டில் வரும் என்றே குறிப்பிட்டுள்ளார். எனவே, ஆர்டிஆர் 310 பைக் மாடலாக இருக்கலாம் என்றே கருதப்படுகின்றது. இந்த மாடல் 2021 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாகலாம்.

பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான, 312.2 சிசி என்ஜின் 24 ஹெச்பி பவரை 9,700 ஆர்.பி.எம் மூலமாகவும் மற்றும் 7,700 ஆர்.பி.எம்-ல் 27.3 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் இணைந்துள்ளது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று ப்ளூடூத்துடன்  இணைப்பினை ஏற்படுத்துகின்ற 5.0 அங்குல வண்ண TFT கிளஸ்ட்டர் கருவியை பெறுகின்றது. டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வாயிலாக கனெக்ட்டிவிட்டி அம்சங்களை தங்கள் ஸ்மார்ட்போனில் பெறலாம். மேலும் டிவிஎஸ் கனெக்ட் ஆப் வாயிலாக இணைப்பினை ஏற்படுத்தலாம்.  இந்த மாடலில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்புகளை ஏற்பது அல்லது தவிர்ப்பது என பலவற்றை வழங்குகின்றது.

எனவே, அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக் மாடலைப் பொறுத்தவரை பல்வேறு வசதிகளுடன் ரூ.2.10 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது கிடைக்கின்ற பிஎஸ்6 அப்பாசிசி ஆர்ஆர் 310 ரூ.2.40 லட்சத்திலும், அதேநேரத்தில் நேக்டூ ஸ்டைல் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் ரூ.2.99 லட்சத்தில் கிடைக்கின்றது.