ஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்

0

Ola series s1 and s1 pro

இந்தியாவின் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரின் ‘Series S’ மின்சார ஸ்கூட்டரில் 10 விதமான நிறங்களுடன், வழக்கபான முறையில் விநியோகம் செய்யாமல் நேரடியாக வீட்டிற்கே டோர் டெலிவரி செய்வதற்கான திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Google News

ரூ.499 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு ஒரே நாளில் 1 லட்சம் ஸ்கூட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக இந்நிறுவனம் தமிழ்நாட்டில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் தொழிற்சாலையின் பணிகளை விரைவுப்படுத்தி வருகின்றது.

ஓலா சீரிஸ் எஸ் சிறப்புகள்

சீரிஸ் எஸ் மின்சார ஸ்கூட்டரில் மிகவும் நவீனத்துவமான டிசைன் அம்சங்களை கொண்டிருப்பதுடன் நேர்த்தியான எல்இடி ஹெட்லைட் பெற்று மூன்று பேட்டரியை கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு பேட்டரியும் 80 கிமீ பயணிக்கும் திறனை கொண்டுள்ளதால், முழுமையான சிங்கிள் பேட்டரி சார்ஜில் 240 கிமீ பயணிக்கும் திறன் கொண்டிருக்கும்.

எஸ்1, எஸ்1 புரோ என இரு விதமான மாறுபாட்டில் வரவுள்ள பேட்டரி ஸ்கூட்டரில் 0- 45 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 விநாடிகளை எடுத்துக் கொள்ளும். முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் ஷாக் அப்சார்பர் பெற்று இரு பக்க டயர்களில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. 12 அங்குல அலாய் வீல் பெற்றதாக அமைந்திருக்கலாம்.