என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்117 ஆண்டுகால பாரம்பரியத்தை பெற்று விளங்குகின்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் பல்வேறு நிறங்களை சந்தையிலிருந்து நீக்கியுள்ளது. இந்நிறுவனத்தின் புல்லட் 500 மாடலில் உள்ள மார்ஷ் கிரே வண்ணமும் நீக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு புல்லட்

என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்

என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புல்லட் 500 மாடலில் விற்பனை செய்யப்பட்டு வரும் மார்ஷ் கிரே (Marsh Grey) நிறம் உட்பட தன்டர்பேர்டு 350 மற்றும் தண்டர்பேர்டு 500  ஆகிய இரு மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்ற லைட்டனிங் (lightning) மற்றும் ஆஸ்பெல்ட் (ASPHALT) ஆகிய இரண்டு நிறங்களும் நீக்கப்பட உள்ளது.

இதுதவிர கிளாசிக் 500 மாடலில் இடம்பெற்றுள்ள கிளாசிக் க்ரோம் (Classic chrome), கிளாசிக் டேன் (Classic Tan) மற்றும் கிளாசிக் சில்வர் (Classic Silver) ஆகிய மூன்று நிறங்களும் நீக்கப்படுவதாக உறுதி செய்யப்படுகின்றது. மேலே வழங்கப்பட்டுள்ள நிறங்களை டீலர்கள் முன்பதிவு செய்வதனை தவிர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவின் முதல் கஃபே ரேசர ரக மாடலான கான்டினென்டினல் ஜிடி 535 பைக்கினை நீக்குவதுடன் இதற்கு மாற்றாக கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கினை களமிறக்க உள்ளது.