ராயல் என்ஃபீலடு ஹிமாலயன் பைக் டெலிவரி தொடங்கியது

0

ரூபாய் 1.84 லட்சம் விலையில் பாரத் ஸ்டேஜ் 4 தர எஃப்ஐ எஞ்சினை பெற்ற  ராயல் என்ஃபீலடு ஹிமாலயன் FI பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மே மாத மத்தியில் FI எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்கள் டெலிவரி கொடுக்கப்பட உள்ளது.

ஹிமாலயன் FI பைக்

  • பல மாதங்களாக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் FI பைக்கிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது.
  • ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.
  • இந்த மாதம் முதல் ஹிமாலயன் ஃப்யூவல் இன்ஜெக்சன் மாடல் பைக் டெலிவரி தரப்பட உள்ளது.

Royal Enfield Himalayan motorcycle

Google News

முந்தைய கார்புரேட்டர் பொருத்தப்பட்ட எஞ்சினுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய FI பொருத்தப்பட்ட ஹிமாலயன் பைக்கில்  24.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 411சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 32 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

200 மிமீ  பயணிக்கும் வகையிலான  41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் முன் சக்கரத்தில் பொருத்தபட்டுள்ளது. பின் சக்கரத்தில்,மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது. முன்புற டயரில் 2-பிஸ்டன் கேளிப்பர்கள் கொண்ட 300 மிமீ டிஸ்க் பிரேக் , பின் டயரில் ஒற்றை பிஸ்டன் கேளிப்பர் கொண்ட 240 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தபட்டுள்ளது. இரு சக்கரங்களிலும் ரிம் ஸ்போக்குகளை பெற்று முன்பக்க சக்கரம், 21 இஞ்ச் மற்றும் பின் சக்கரம், 18 இஞ்ச் கொண்டுள்ளது.

Royal Enfield Himalayan testing1

முந்தைய மாடலை விட கூடுதலாக ரூபாய் 20,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு ரூபாய் 1.84 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக விற்பனை நிறுத்தப்பட்டிருந்த ஹிமாலயன் பைக் தற்பொது விற்பனைக்கு கிடைக்க உள்ளது.