புதிய நிறத்தில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் படங்கள் வெளியானது

0

2018 royal enfield himalayanபுல்லட் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அட்வென்ச்சர் ரக மாடலான ஹிமாலயன் பைக் டீலர்களுக்கு வெள்ளை மற்றும் கிரே நிற கலப்பில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஹிமாலயன் பைக்

2018 royal enfield himalayan petrol tank

Google News

ராயல் என்ஃபீல்டின் பிஎஸ் 3 மாடல் பல்வேறு தொழிற்நுட்ப பிரச்சனைகளால் மிகப்பெரிய அளவில் மதிப்பினை இழந்த நிலையில் சில மாதங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், பாரத் ஸ்டேஜ் 4 விதிகளுக்கு ஏற்ப அறிமுகம் செய்யப்பட்ட ஹிமாலயன் மிக சிறப்பான தரத்தை பெற்றிருந்த காரணத்தால் சந்தையில் மிக சிறப்பான ஆதரவை பெற தொடங்கியது.

தற்போது வெள்ளை (Snow White) மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக வெள்ளை மற்றும் கிரே ஆகிய கலப்பு நிறத்தை கொண்டதாக வெளியாக உள்ளது. புதிய நிறத்தை தவிர்த்து வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2018 royal enfield himalayan bike new color

இந்த பைக்கில், ஃப்யூவல் இன்ஜெக்‌ஷனுடன் பெற்ற 24.5 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 411 சிசி லாங்க் ஸ்டோர்க் எஞ்சின் 32 என்எம் டார்க் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

அடுத்த சில வாரங்களில் புதிய தண்டர்பேர்டு 350X மற்றும் 500X ஆகியவற்றுடன் புதிய நிறத்திலான ஹிமாலயன் பைக் மாடலும் வரவுள்ளது. மேலும் நாம் உறுதி செய்யப்பட்டதை போல என்ஃபீல்டு கான்டினென்டினல் ஜிடி 535 பைக் நீக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2018 royal enfield himalayan grey white