ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் சந்தையிலிருந்து நீக்கமா ?

0

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற கம்பீரமான மோட்டர்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீலடு நிறுவனத்தின் ஹிமாலயன் அட்வென்ச்சர் ரக மாடல் கடந்த மூன்று மாதங்களாக எந்தவொரு பைக்குகளும் விற்பனை செய்யப்படவிலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Himalayan bike

Google News

ஹிமாலயன் பைக்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் குறைந்தவிலை பெற்ற அட்வென்ச்சர் ரக மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஹிமாலயன் பைக் மாடல் விற்பனைக்கு வந்த நாள் முதலே பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் மிக கடுமையாக வாடிக்கையாளர்களால் ராயல் என்ஃபீலடு நிறுவனத்தின் மீதான புகார்கள் தொடர்ந்து சுமத்தப்பட்ட நிலையில் ஏப்ரல் 1ந் தேதி முதல் எந்தவொரு மாடலும் டெலிவரி கொடுக்கப்படவில்லை.

rip himalayan

ஹிமாலயன் நீக்கமா ?

பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து பிஎஸ் 3 எஞ்சின் பொருத்தப்பட்ட ஹிமாலயன் பைக்குகள் விற்பனையை முற்றிலுமாக ராயல் என்ஃபீல்டு நிறுத்தியிருந்தாலும், பல்வேறு குறைகள் சொல்லப்பட்டிருந்த நிலையில் அவற்றை நீக்குவதற்கும் எஃப்ஐ வசதியுடன் கூடிய பிஎஸ் 4 எஞ்சினுடன் அறிமுகம் செய்வதற்காக மேம்பாட்டு பணிகளை ராயல் என்ஃபீல்டு மேற்கொண்டு வருவதால் தற்காலிகமாக டெலிவரியை நிறுத்தி வைத்துள்ளது.

himalyan defects

ஆனால் டீலர்களிடம் தொடர்ந்து ராயல் என்ஃபீலடு ஹிமாலயன் அட்வென்ச்சர் ரக மாடலுக்கு முன்பதிவு நடந்து வருகின்றது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 2 மாதங்கள் என கூறப்பட்டிருப்பதனால், ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட மாத தொடக்க வாரங்களில் புதிய மேம்படுத்தப்பட்ட ஹிமாலயன் பைக் பிஎஸ் 4 எஞ்சினுடன், ஏபிஎஸ் போன்றவற்றை பெற்றதாக அறிமுகம் செய்யப்படலாம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Royal Enfield Himalayan motorcycle