ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650, கான்டினென்டினல் ஜிடி 650 விலை உயர்ந்தது

Royal-Enfield-Continental-GT-650

650சிசி சந்தையில் பிரசத்தி பெற்று விளங்கும் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 என இரு மாடல்களிலும் அமோகமான வரவேற்பினை இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை நிலை நிறுத்த தொடங்கியுள்ளது. கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கினை அதிகபட்சமாக ரூ.6,483 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மார்க் II இன்டர்செப்டர் மாடலில் இடம்பெற்றிருந்த பேட்ஜ் அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் இடம்பெற்ற 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியளவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் அமோகமான வரவேற்பினை பெற்றுள்ள இரு மாடல்களின் விலையும் ரூ.5,762 முதல் அதிகபட்சமாக ரூ.6,483 வரை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை பட்டியல்..,

இன்டர்செப்டார் 650 – ரூ. 2,56,372

கஸ்டம் இன்டர்செப்டார் 650 – ரூ. 2,64,029

க்ரோம் இன்டர்செப்டார் 650 – ரூ. 2,76,791

கான்டினென்டினல் ஜிடி 650 ரூ. 2,65,609

கஸ்டம் கான்டினென்டினல் ஜிடி 650 ரூ. 2,73,109

க்ரோம் கான்டினென்டினல் ஜிடி 650 ரூ. 2,86,609

ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ்