ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு X ஆக்சசெரீஸ் அறிமுகம்

சமீபத்தில் ராயல் என்ஃபீல்ட் வெளியிட்டிருந்த தண்டர்பேர்டு 350X மற்றும் தண்டர்பேர்டு 500X ஆகிய இரு மாடல்களுக்கு ஒரிஜினல் என்ஃபீல்ட் ஆக்சசெரீஸ் கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆக்சசெரீஸ்கள் என்ஃபீல்டு டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது.

ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு X

117 ஆண்டுகால என்ஃபீல்டு வரலாற்றில் முதன்முறையாக அலாய் வீல், டீயூப்லெஸ் டயர் ன்ன நவீனமயாக வெளியான தண்டர்பேர்டு எக்ஸ் வரிசையில் பல்வேறு துனைக்கருவிகளை ரூ. 900 முதல் ரூ.9500 வரையிலான மாறுபட்ட விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

குறிப்பாக இந்த மாடல்களுக்கு அலுமினிய கேஸ்ட் அலாய் வீல், துனியால் ஆன பெனியர் பாக்ஸ், எஞ்சின் கார்டு, பின்புற பேக் ரெஸ்ட் ஆகியவை வெளியிடபட்டுள்ளது. ஒவ்வொரு பாகங்களின் விலை விபரத்தை அறிந்து கொள்ள பார்வையிடுங்கள் ; royal enfield 

117 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக 9 ஸ்போக்குகளை பெற்ற அலாய் வீல் வழங்கப்பட்டு கூடுதலாக ட்யூப்லெஸ் டயரினை வழங்கியுள்ளது. மேலும் எல்இடி புராஜெக்டர் முகப்பு விளக்கில் கூடுதலாக பகல் நேரத்திலும் எரியும் வகையிலான எல்இடி ரன்னிங் விக்கினை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டர் இருபிரிவு அமைப்புடன் வழங்கப்பட்டுள்ளது.

தண்டர்பேர்ட் 350X மாடலில் சிவப்பு (Roving Red) மற்றும் வெள்ளை (Whimsical White) ஆகிய இரு நிறங்களும், தண்டர்பேர்டு 500X மாடலில் நீலம் ( Drifter Blue)  மற்றும் ஆரஞ்சு (Getaway Orange) ஆகிய இரு நிறங்களை பெற்றிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் உட்பட மெக்கானிக்கல் அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் வழங்கப்படாமல் , முன் மற்றும் பின் டயர்களில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் ஏபிஎஸ் தொடர்ந்து வழங்கப்படாமல் உள்ளது.

தண்டர்பேர்ட் 350X பைக்கில் 19.8 bhp பவரை வெளிப்படுத்தும் 350சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 28 NM டார்கினை வழங்குவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

தண்டர்பேர்ட் 500X பைக்கில் 27.2 bhp பவரை வெளிப்படுத்தும் 500சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 41 NM டார்கினை வழங்குவதுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கிறது.

போட்டியாளர்கள்

இந்தியாவில் க்ரூஸர் ரகத்தில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களில் அவென்ஜர் 220 குறைந்த சிசியில் கிடைத்து வரும் நிலையில் நேரடியான போட்டியாளாராக யூஎம் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் விளங்குகின்றது.

விலை

சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களுடன் கூடுதல் விருப்பமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தண்டர்பேர்டு எக்ஸ் பைக் சாதாரண மாடலை விட ரூ.8000 வரை கூடுதலாக விலை நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350X – ரூ. 1.72 லட்சம்

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500X – ரூ. 2.18 லட்சம்

(ஆன்ரோடு தமிழ்நாடு )

Recommended For You