ராயல் என்ஃபீல்டு SG650 கான்செப்ட் அறிமுகம் – EICMA 2021

0

Royal Enfield SG650

கிளாசிக் மற்றும் மாடர்ன் என்ற கலவையில் ஸ்டைலிஷான மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு SG650 பைக்கில் 650சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், முதன்முறையாக 2021 EICMA  அரங்கில் காட்சிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Google News

SG என குறிப்பிடப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் உற்பத்தி நிலை மாடல் ராயல் என்ஃபீல்டு Shotgun என்று அழைக்கப்படுமா.? என்பது குறித்து உறுதியான தகவலும் இல்லை. முன்பாக இந்நிறுவனம் ஷாட்கன் என்ற பெயரை பதிவு செய்துள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள கான்செப்ட் நிலை எஸ்ஜி650 முன்பாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற 650சிசி என்ஜின் பெற்ற க்ரூஸர் போலவே காட்சியளிக்கின்றது.

RE SG650 பற்றி டிசைனிங் பிரிவு தலைவர் மார்க் வெல்ஸ் கூறுகையில்., ராயல் என்ஃபீல்டின் பாரம்பரியத்திற்கு உண்மையாகவும், அதேநேரத்தில் நவீன மயமாக்கப்பட்ட நுட்பங்களை கொண்டு, கடந்த கால மற்றும் எதிர்காலத்தின் கலவையாக பல்வேறு வகையான பொருட்களின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பாபர் ரக ஸ்டைலை போல அமைந்துள்ள SG650 கான்செப்ட் ஒற்றை இருக்கை, குறுகிய கைப்பிடி, சிறிய அளவிலான முன் மற்றும் பின்புற ஃபெண்டர், பார்-எண்ட் கண்ணாடிகள் மற்றும் பருமனான டயர்கள் கொண்டுள்ளது. ஹெட்லைட் ரெட்ரோ-பாணியில் பளபளப்பான அலுமினிய பூச்சு பெற்று,  CNC billet அலுமினிய எரிபொருள் டேங்க் நவீனத்துவமான மோட்டார் சைக்கிள்கள் போன்ற டிஜிட்டல் கிராபிக்ஸ், CNC billet அலுபினிய அலாய் வீல் கொண்டுள்ளது.

Royal Enfield SG650 headlight

எஸ்ஜி 650 கான்செப்ட்டில் 650சிசி, பேரலல்-ட்வின் இன்ஜினும் டிஜிட்டல் கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டு, யூஎஸ்டி ஃபோர்க், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர், டூயல் டிஸ்க் பிரேக் கொண்டதாக காட்சிக்கு வரவுள்ளது. மேலதிக விபரங்கள் 2021 EICMA அரங்கில் கிடைக்கும்.

Royal Enfield SG650 handlebar Royal Enfield SG650 rear Royal Enfield SG650 side