15 சிறப்பு ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பைக்குகள் விற்பனை விபரம்

0

nsg classic 500ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்த கிளாசிக் ஸ்டெல்த் பிளாக் 500 அடிப்படையிலான 15 சிறப்பு மாடல்களை ரூ.1.90 லட்சம் விலையில் டிசம்பர் 13ந் தேதி பகல் 12.00 மணிக்கு விற்பனைக்கு ஆன்லைனில் வெளியிட உள்ளது.

ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500

Royal Enfield Classic 500 Stealth Black color

Google News

உலகின் மிக பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனம் தொடர்ந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற பெருமைக்குரிய என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் சமீபத்தில் ரூ.2.05 லட்சம் விலையில் வெளியிட்டிருந்த கருப்பு நிற கிளாசிக் ஸ்டெல்த் பிளாக் 500 மாடலில் 15 யூனிட்களை சிறப்பு விற்பனை பிரிவில் விற்பனை செய்ய உள்ளது.

15 தேசிய பாதுகாப்பு படையினர் (National Security Guards) கடந்த செப்டம்பர் மாதம் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் (Fight Against Terror) என்ற நோக்கத்தில் கருப்பு பூனை படை வீரர்கள் 13 மாநிலங்களில் சுமார் 8000 கிமீ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்த மோட்டார்சைக்கிள்கள் சிறப்பு மாடலாக விற்பனை செய்யப்படுகின்றது. இன்று (டிசம்பர் 8) முதல் www.royalenfield.com/bravehearts இணையதளத்தில் பதிவு செய்து கொண்டால், வருகின்ற டிசம்பர் 13ந் தேதி விற்பனைக்கு ஆன்லைனில் கிடைக்க உள்ளது.

யார் முதலில் முன்பதிவு செய்கிறார்களோ, அவர்களுக்கு மோட்டார் சைக்கிள் டெலிவரி செய்யப்பட உள்ளது. முன்பதிவு கட்டணம் ரூ.15,000 ஆகும்.

Royal Enfield Classic 500 black

விற்பனை செய்யப்பட உள்ள 15 மோட்டார்சைக்கிள்களின் வருமானத்தை Prerna என்ற லாப நோக்கமற்ற தண்ணார்வ தொண்டு நிறுவனத்தின் மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலனுக்கு ராயல் என்ஃபீல்டு வழங்க உள்ளது.

நுட்ப விபரம்

கிளாசிக் 500 மாடலில் 499சிசி ஏர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 27.2 bhp பவர் மற்றும் 41 Nm டார்க் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பின்புற சக்கரங்களுக்கு 153mm டிரம் பிரேக் பொருத்தப்பட்டிருந்த நிலையில் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸை அதிகரிக்கும் நோக்கில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது.