ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு 350X & தண்டர்பேர்டு 500X அறிமுக தேதி விபரம்

0

Royal Enfield Thunderbird 350X and 500Xஉலகின் மிக பழமையான மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் தண்டர்பேர்டு 350X மற்றும் ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு 500X ஆகிய இரண்டு பைக்குகளை பிப்ரவரி 22ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு 350X & தண்டர்பேர்டு 500X

Royal Enfield Thunderbird 500X yellow

Google News

சமீபத்தில் டீலர்களுக்கு வந்துள்ள புதிய தண்டர்பேர்டு படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் விற்பனைக்கு வெளியிடப்படும் தேதி குறித்து அதிகார்வப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தொடர்ந்து பாரம்பரியத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் என்ஃபீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு மாடலில் 10 ஸ்போக்குகளை கொண்ட அலாய் வீல், ட்யூப்லெஸ் டயர், ஃபிளாட் ஸ்டீயரிங் வீல், கருப்பு சைலென்ஸர் பெற்றதாக அமைந்துள்ளது.

மற்றபடி தற்போது விற்பனையில் உள்ள தண்டர்பேர்டில் இடம்பெற்றுள்ள முன்புற டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் பெற்றதாக வந்துள்ளது. டீலர்களுக்கு வந்துள்ள பைக்குகள் மஞ்சள் , நீலம் சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் படங்கள் வெளியாகியுள்ளது.

Royal Enfield Thunderbird 500X Candy Colours