ரூ. 1,099 விலையில் புதிய வகை ஹெல்மெட்களை வெளியிட்டுள்ளது ஸ்டீல்பேர்டு

புதிய டிசைனில் ஹை-GN பிராண்ட் ஹெல்மெட்களை ஸ்டீல்பேர்டு ஹை-டெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த ஹெல்மெட்கள் பெண்களுக்காக ‘Frost for girls’என்ற பெயரிலும், ஆண்களுக்காக ‘Pulse for boys’ என்ற பெயரில் வெளியிட்டப்படுள்ளது. இந்த ஹெல்மெட்கள் 540mm, 560mm மற்றும் 580mm அளவுகளில் கிடைக்கும்.

தனது புதிய தயாரிப்புகள் அதிநவீன வசதிகளை கொண்டதோடு, பாதுகாப்பு வசதிகள் நிறைந்தாக இருக்கும் என்று ஸ்டீல்பேர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஹெல்மெட் குறித்து பேசிய ஸ்டீல்பேர்டு ஹெல்மெட், குளோபல் குரூப் நிறுவன தலைமை சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் உயர் அதிகாரி ஷைலேந்திர ஜெயின், இந்த புதிய வகை ஹெல்மெட் ஒபன் பேஸ் வகையை சேர்ந்தது. இத்தாலிய டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த ஹெல்மெட்கள், சிவப்பு, நீலம், மஞ்சள் மற்றும் பல நிறங்களில் கிடைகிறது. இந்த ஹெல்மெட்கள் குறைவான விலையும், அனைவரும் வாங்கி அணியும் வகையிலும் இருக்கும். இந்த ஹெல்மெட்களில் பாதுகாப்பிற்காக அதிக அடர்த்தி கொண்ட EPS(Expanded Polystyrene foam) பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார். .