ரூ.2,000 வரை சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF விலை உயர்வு

0

suzuki gixxer bs6

இந்தியாவின் 150-160சிசி சந்தையில் மிகவும் பிரீமியம் விலை கொண்ட சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஜிக்ஸர் மற்றும் ஜிக்ஸர் SF என இரு மாடல்களின் விலை அதிகபட்சமாக ரூபாய் 2000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Google News

13.6 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் SF வரிசை பைக் என்ஜினில்  ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்று சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 13.8 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. முந்தைய பிஎஸ்4 மாடலை விட பிஎஸ்6 ஜிக்ஸர் வரிசை பவர் குறைக்கப்பட்டுள்ளது.

முழுமையான எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. சுசுகி ஜிக்ஸர் பிஎஸ் 6: ஸ்பிர்க்கிள் கருப்பு, கிளாஸ் கருப்பு மற்றும் சோனிக் வெள்ளி / ஸ்பிர்க்கிள் கருப்பு
சுசுகி ஜிக்ஸர் SF பிஎஸ் 6:  கருப்பு மற்றும் சோனிக் வெள்ளி / ஸ்பிர்க்கிள் கருப்பு
சுசுகி ஜிக்ஸர் SF மோட்டோ ஜிபி பிஎஸ் 6: மெட்டாலிக் ட்ரைடன் ப்ளூ

Model Price (எக்ஸ்ஷோரூம் சென்னை)
GIXXER INR 1,17,644
GIXXER SF INR 1,27,644
GIXXER SF MotoGP INR 1,28,675

 

ஜிக்ஸர் 250 வரிசை விலை உயர்வு

ஜிக்ஸர் 250 மற்றும் ஜிக்ஸர் SF 250 என இரு மாடல்களின் விலையும் ரூ.2000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

249சிசி SOHC , 4 வால்வுகளை பெற்ற ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.6Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

ஜிக்ஸர் 250 – ரூ.169,145

ஜிக்ஸர் எஸ்எஃப் – ரூ.179,843

ஜிக்ஸர் எஸ்எஃப் மோட்டோஜிபி – ரூ.180,644

(விலை எக்ஸ்ஷோரூம் சென்னை)