க்ரூஸர் ஸ்டைல் சுசுகி இன்ட்ரூடர் 250 விற்பனைக்கு வெளியாகிறதா.?

suzuki intruder
suzuki intruder 155

க்ரூஸர் ரக சந்தையில் குறைந்த விலை 250சிசி என்ஜின் பெற்ற சுசுகி இன்ட்ரூடர் 250 பைக்கினை சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சுசுகி நிறுவனம், புதிய 250சிசி என்ஜின் கொண்ட ஃபேரிங் ரக ஜிக்ஸர் SF 250 பைக் மாடலை ரூ.1.70 லட்சம் விலையில் வெளியிட்டுள்ளது. அதே போல 155சிசி என்ஜின் பெற்ற 2019 சுசுகி ஜிக்ஸர் எஸ்.எஃப் பைக் மாடல் 1.10 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

250சிசி என்ஜினுடன் சுசுகி இன்ட்ரூடர் 250

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படுகின்ற 155சிசி என்ஜின் கொண்ட இன்ட்ரூடர் அறிமுகத்தின் போது பெற்ற வரவேற்பினை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள தவறியுள்ளது.

தற்போது இந்திய சந்தையில் 220சிசி என்ஜின் பெற்ற பஜாஜ் அவென்ஜர் க்ரூஸர் ரக மாடல் மட்டும் விற்பனைக்கு கிடைத்து வரும் நிலையில், இந்த மாடலுக்கும், 350சிசி என்ஜின் பெற்ற ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு போன்ற மாடல்களுக்கு சவாலினை ஏற்படுத்தும் வகையில் இன்ட்ரூடர் 250 க்ரூஸர் ரக மாடலாக விற்பனைக்கு கொண்டு வர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

என்ஜினை பொருத்தவரை ஜிக்ஸர் 250 மாடலில் இடம்பெற்றுள்ள அதே சுசுகி ஆயில் கூலிங் சிஸ்டத்துடன் கூடிய 249சிசி SOHC , 4 வால்வுகளை பெற்ற ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.6Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கலாம்.

நேக்டு ஸ்டைல் ஜிக்ஸர் 250 மற்றும் 2019 ஜிக்ஸர் என இரு மாடல்களும் அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில், இதனை தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த வருடத்தின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.