விற்பனையில் டாப் 10 டூவீலர்கள் – மே 2017

இந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகனமாக விளங்குகின்ற ஹோண்டா ஆக்டிவா மே மாத விற்பனை முடிவில் 2,82,478 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. மே 2017 மாதந்திர விற்பனையில் டாப் 10 டூவீலர்கள் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.

டாப் 10 டூவீலர்கள் – மே 2017

நமது நாட்டில் ஸ்கூட்டர் சந்தைக்கான ஆதரவு மிக சிறப்பான வகையில் வளர்ந்து வருகின்ற நிலையில் முன்னணி ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா மற்றும் டியோ என இரு மாடல்களும் முதல் 10 இடங்களில் இடம்பிடித்திருக்கின்றது.

பைக்குகளில் வழக்கம் போல ஹீரோ ஸ்பிளென்டர்,எச்எஃப் டீலக்ஸ,உள்பட ஹோண்டா சிபி ஷைன், பல்சர் போன்றவற்றுடன் டிவிஎஸ் எக்ஸ்எல் மற்றும் ஜூபிடர் போன்ற மாடல்களும் முதல் 10 இடங்களில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.

ஸ்கூட்டர் சந்தையில் புதிய மாடல் ஒன்றை ஹோண்டா வருகின்ற 21ந் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளதாக உறுதி செய்துள்ளது.

Recommended For You