₹ 9.46 லட்சத்தில் புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் வெளியானது

triumph speed twin

பாரம்பரிய வடிவ தாத்பரியங்களை பின்பற்றி வந்துள்ள புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக் இந்தியாவில் ரூபாய் 9.46 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 97 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் என்ஜினை கொண்டுள்ளது.

1939 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த ஸ்பீடு ட்வீன் 5டி மாடலின் உந்துதலில் ஸ்ட்ரீட் ட்வீன் மற்றும் தரக்ஸ்டன் ஆர் மாடல்களின் கூட்டு வடிவத்தை பின்பற்றியதாக இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின்

1,200 சிசி பேரலல் ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 97 பிஎச்பி குதிரைத் திறன், 112 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்துகின்றது. 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ரைடு பை ஒயர் தொழில்நுட்பமும், ரெயின், ரோடு, மற்றும் ஸ்போர்ட் மூன்று விதமான நிலைகளில் இயக்கும் டிரைவிங் மோடுகளும் உள்ளன.

இந்த பைக்கில் 41 மிமீ காட்ரீட்ஜ் முன்புற ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் இரட்டை சாக் அப்ஷார்பர் கொண்டு, முன்சக்கரத்தில்  305மிமீ இரண்டு டிஸ்க்குளும், பின்சக்கரத்தில் 220மிமீ சிங்கிள் டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டமும் உள்ளது. இரு டயர்களும் 17 அங்குல வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக் ரூபாய் 9.46 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம் ) கிடைக்கும்.