ரூ.8,000 வரை டிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் விலை உயர்ந்தது

0

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம், சமீபத்தில் அறிமுகம் செய்த பவர்ஃபுல்லான அப்பாச்சி 310 பைக்கின் விலையை அதிகபட்சமாக ரூ.18,000 வரை உயர்த்தியுள்ள நிலையில், தமிழகத்தில் ரூ.8000 மட்டும் உயர்த்தப்பட்டு டிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் விலை ரூ.2.13 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் விலை

கடந்த வருடம் இறுதியில், இந்தியா சந்தையில் ரூ.2.05 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட அப்பாச்சி 310 பைக்கின் விலையை அதிரடியாக டிவிஎஸ் உயர்த்தியுள்ளதை அதிகார்வப்பூர்வமான விலையை தனது இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. தற்போது அதிகபட்சமாக ரூ.18,000 வரை டெல்லி உட்பட அசாம், சண்டிகர், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஜார்கண்ட், கர்நாடகம், ஒரிசா பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம்
பல்வேறு மாநிலங்களில் ரூபாய் 2.23 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகம், பாண்டிச்சேரி உட்பட ஒரு சில மாநிலங்களில் ரூ.8000 விலை உயர்த்தப்பட்டு ரூ.2.13 லட்சத்தில் கிடைக்க தொடங்கியுள்ளது. நாட்டிலே குறைந்தபட்ச விலையாக கேரளா மாநிலத்தில் ரூ.1.99 லட்சத்தில் கிடைக்கின்றது. (விலை விபரம் எக்ஸ்-ஷோரூம்)

டெர்லிஸ் ஃபிரேம் அடிச்சட்டை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பைக் மிகவும் ஸ்டைலிஷான இரட்டை பிரிவு கொண்ட வட்ட வடிவ முகப்பு விளக்குடன் பை-எல்இடி விளக்குகளை கொண்டுள்ளது. மிக நேர்த்தியான பாடி ஸ்டிக்கரிங் பெற்றுள்ள ஆர்ஆர்310 பைக்கில் பின்புறத்தில் அமைந்துள்ள டெயில் விளக்கு எல்இடி ஒமேகா வடிவத்தில் அமைந்துள்ளது.

அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் 313 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 34 ஹெச்பி ஆற்றல் மற்றும் 28 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் ஆற்றலை எடுத்துச் செல்ல 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. 0 முதல் 60 கிமீ வேகத்தை  2.63 விநாடிகளில் எட்டும் திறனுடன்,அதிகபட்சமாக மணிக்கு 165 கிமீ வேகத்தை எட்டும் திறனை பெற்றுள்ளது.

இரட்டைப் பிரிவு எல்இடி முகப்பு விளக்குடன் முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்குடன், தங்க நிறத்துடன் கூடிய யூஎஸ்டி ஃபோர்க்குகள், 17 அங்குல அலாய வீல் 5 ஸ்போக்குகளுடன் கூடிய மிச்செலின் ரேடியல் டயர் பெற்றதாக வந்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் மைலேஜ் லிட்டருக்கு 25 முதல் 30 கிமீ அமைந்திருக்கும்.

தமிழகத்தில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் முதற்கட்டமாக சென்னை , கோவை மற்று ஓசூரில் மட்டுமே கிடைக்க உள்ளது. சென்னையில் லோகேஷ் டிவிஎஸ், எஸ்.பி.எம் மோட்டார்ஸ், கோவையில் ஶ்ரீசக்திசாரதா டிவிஎஸ், லோட்டஸ் ஏஜென்சி மற்றும் ஓசூர்  விஎஸ் ஆட்டோ மற்றும் புதுவை ஜேகே டிவிஎஸ் ஆகியவற்றில் கிடைக்கும்.