TVS-Apache-RTR-200-4V

மிகவும் ஸ்டைலிஷான 200சிசி மாடலாக விளங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் கிளஸ்ட்டர் தற்பொழுது ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் (SmartXonnect) பெற்றதாக பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்க தொடங்கியுள்ளது. விற்பனையில் உள்ள மாடலை விட ரூபாய் 3,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேறு எந்த மாற்றங்களும் பெறாமல் தொடர்ந்து விற்பனையில் உள்ள பிஎஸ் 4 மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜினை மட்டுமே பெற்றுள்ளது. அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 20.5 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் உள்ளது.

அப்பாச்சி 200 பைக்கில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பெற்றிருந்தாலும், என்டார்க் 125 மற்றும் புதிய ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியை பெற்றதே ஆகும். குறிப்பாக இதன் மூலம் ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு டிவிஎஸ் கனெக்ட் ஆப் மூலம் இணைத்துக் கொள்ளுவதன் மூலம் குறுஞ்செய்தி, அழைப்புகள் போன்ற அறிவிப்புகள், ஓவர் ஸ்பீடு அலெர்ட், டீரிப் மீட்டர், பார்க்கிங் இருப்பிடம், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கிராஸ் அலெர்ட் மற்றும் அதிகபட்ச வேகத்தை பதிவு செய்வதுடன் ஹெல்மெட் ரிமைன்டரை கொண்டுள்ளது.

இந்த பைக்கில் உள்ள கைரோஸ்கோபிக் சென்சாரைப் பயன்படுத்தி வளைவுகளில் பயணிக்கும் போது குறைவான லீன் ஏங்கிளை பதிவு செய்கின்றது. பின்னர், அவை டிஜிட்டல் கன்சோலில் தோன்றும், மேலும் இதில் உள்ள ரேஸ் டெலிமெட்ரி ஒவ்வொரு ரேஸ் அல்லது சவாரி முடிவிலும் உள்ள அனைத்து அத்தியாவசிய தரவுகளையும் சுருக்கமாக வழங்கும். க்ராஷ் அலர்ட் சிஸ்டம்  இது ஒரு அவசதர கால பாதுகாப்பு அம்சசமாகும்.  பைக் சாய்ந்திருந்தால் அல்லது ஏதேனும் எதிர்பாரத விபத்தில் சிக்கி உள்ளதை சென்சார் மூலம் ஆப் வாயிலாக கிடைத்தால் உடனடியாக அடுத்த மூன்று நிமிடத்திற்குள் ரைடர் பதிவு செய்து வைத்துள்ள அவசரகால தொடர்புகளுக்கு செய்தி கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக்குடன் இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி விலை 1.14 லட்சம் ரூபாய் ஆகும். (எக்ஸ்ஷோரூம் டெல்லி)