டிவிஎஸ் அப்பாச்சி RTR பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்

டிவிஎஸ் அப்பாச்சி RTR

பிரசத்தி பெற்ற டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் , டிவிஎஸ் அப்பாச்சி RTR வரிசை பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக் எனப்படும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டு அதிகார்வப்பூர்வ விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சியின் ஆர்டிஆர் வரிசையில் உள்ள, அப்பாச்சி RTR 160, 160 4V, 180 மற்றும் 200 4V என அனைத்து மாடல்களிலும் சூப்பர் மோட்டோ ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டு சந்தையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக் விலை பட்டியல்

அப்பாச்சி ஸ்போர்ட்டிவ் பைக் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கின்ற 160 சிசி என்ஜின் பெற்ற 4 வால்வுகள் கொண்ட மாடல் மற்றும் இரண்டு வால்வுகள் சாதாரண மாடல் என இரண்டிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர் 160 மாடலின் இரண்டு வால்வுகளை பெற்ற பைக்கில் சில புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக பேக் லிட் இடம்பெற்ற ஸ்பீடோமீட்டர் உடன் டயர் ஆர்ட், புதிய இருக்கை, புதிய ஹேண்டில் பார்  டேம்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக தோற்ற அமைப்பில் புதிய பாடி கிராபிக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் முதன்முறையாக இந்தியாவில் 180 சிசி பைக்குகளில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்ற மாடலாக அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் விளங்குகின்றது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 front disc (drum) with ABS – ரூ. 85,510
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 with ABS – ரூ. 90,978
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4V (drum) with ABS – ரூ. 89,785
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 (carb) with ABS – ரூ. 1,11,280

(விற்பனையக விலை டெல்லி)