டிவிஎஸ் கிராபைட் ஸ்கூட்டர் வருகை விபரம்

0

TVS Graphiteதமிழகத்தை சார்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிய 125 சிசி அல்லது 150 சிசி எஞ்சின் பெற்ற டிவிஎஸ் கிராபைட் ஸ்கூட்டர் மாடலை அடுத்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

டிவிஎஸ் கிராபைட் ஸ்கூட்டர்

tvs graphite scooter details

கடந்த 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட கிராபைட் என்ற பெயரிலான ஸ்கூட்டர் கான்செப்ட் மாடல் அடிப்பையிலான சோதனை ஓட்ட படங்கள் சமீபத்தில் இணையத்தில் கசிந்திருந்தது.

சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுப்பட்டிருக்கின்ற புதிய மாடல் ஜூபிடர் அடிப்படையில் அல்லது கிராபைட் கான்செப்ட் அடிப்படையில் 125சிசி அல்லது 150சிசி எஞ்சின் பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  மேலும் இந்த ஸ்கூட்டர் ஸ்போர்ட்டிவ் தோற்ற பொலிவினை பெற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பைக்அட்வைஸ் வெளியிட்டுள்ள தகவலில் இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 103 கிமீ வேகத்தை எட்டும் மாடலாக அமைந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. மேலும் எஃப்ஐ எஞ்சின் பெற்று முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்த ஏபிஎஸ் ஆப்ஷனலாக வழங்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஆட்டோமேட்டேட் மெனுவல் டெக்னாலாஜி கியர்பாக்ஸ், நேவிகேஷன் ஆகியவற்றை பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.