ரூ.55,266 விலையில் டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் களமிறங்கியது

இந்திய சந்தையில் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் ஸ்கூட்டராக விளங்கும் டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ரூ.55,266 விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.tvs jupiter classic scooter front

 

  டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர்

விற்பனையில் கிடைக்கின்ற மாடலை விட கூடுதலான வசதிகளுடன் புதிய ஜூபிடர் கிளாசிக் பல்வேறு புதிய அம்சங்களை பெற்றதாக வந்துள்ள நிலையில் சன்லிட் ஐவரி பாடி நிறத்தை பெற்றிருப்பதுடன் ஓக் பேனல் , முழு குரோம் நிறத்தை பெற்ற சைட் மிரர் , க்ரோம் பேக்ரெஸ்ட், ஸ்மார்ட் யூஎஸ்பி சார்ஜர் போன்றவற்றுடன் கிடைக்கின்றது.

tvs jupiter classic scooter side

 

ஜூபிடர் கிளாசிக் மாடலில் அடுத்த தலைமுறை 110 சிசி எஞ்சின் பொருந்த்தப்பட்டு 7.9 பிஹெச்பி ஆற்றலை 7500 rpm சுழற்சியிலும் 8 Nm டார்க்கினை வழங்க 5500 rpm எடுத்துக்கொள்ளுகின்றது. டிவிஎஸ் நிறுவனத்தால் காப்புரிமை பெற்ற எக்னோமீட்டர் நுட்பத்தை பெற்றுள்ளதால் ஈகோ மோட் மற்றும் பவர் மோட் இரு பிரிவுகள் கொண்ட மோடினை எஞ்சின் கிடைக்கின்றது.

tvs jupiter classic scooter

 

இதன் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை பெற ஈக்கோமோட் அம்சம் ஆராய் கிளைம் அடிப்பையில் லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரஙல்லதாகும்.

எஸ்பிஎஸ் எனப்படும் நுட்பத்தினை பெற்றுள்ள ஜூபிடர் கிளாசிக் பின் பிரேக்கினை பயன்படுத்தும்போது முன் பிரேக்கினை தானாகவே ஆக்டிவேட் ஆகி பிரேக்கினை பிடிக்கும்.

ரூ.55,266 எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலையில் டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது.

tvs jupiter classic windshield tvs jupiter classic scooter seat tvs jupiter classic rest