டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷன் அறிமுகமானது

0

TVS Scooty Pep Plus Matte Edition

பண்டிகை காலத்தை முன்னிட்டு டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, தனது ஸ்கூட்டி பெப் பிளஸ் மாடலில் மேட் எடிஷன் என்ற பெயரில் கோரல் மேட் மற்றும் அக்வா மேட் என இரு நிறங்களை கொண்டதாக ரூ.44,322 விலையில் வெளியிட்டுள்ளது. முன்பாக டிவிஎஸ் நிறுவனம், ரேடியான் சிறப்பு எடிஷன், ஜூபிடர் கிராண்டே, ஸ்டார்ட் சிட்டி பிளஸ் எடிஷன், மற்றும் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் என மொத்தமாக ஐந்து சிறபு எடிஷன்களை வெளியிட்டுள்ளது.

Google News

ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷனில் எந்த மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல், மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட நிறங்களுடன், கருப்பு நிறத்தை பேனல் மற்றும் அப்ரானில் கொண்டுள்ளது. மேலும் இருக்கையில் கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டி பெப் பிளஸ் 87.8 சிசி என்ஜினை கொண்டதாக விற்பனை செய்யப்படுகின்றது.

4.9hp குதிரைத்திறன் மற்றும்  5.8Nm முறுக்கு விசை வெளிப்படுத்தும் 87.8 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த எடையைவ பெற்ற ஸ்கூட்டர் மாடலாக 95 கிலோ மட்டும் பெற்றுள்ளது.

சிபிஎஸ் எனப்படுகின்ற கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டத்தை டிவிஎஸ் நிறுவனம்  சிங்க்ரோய்ஸ்டு பிரேக்கிங் சிஸ்டம் என அழைப்பதுடன் இரு டயர்களிலும் 110 மிமீ டிரம் பிரேக் கொண்டுள்ளது.

TVS Scooty Pep Plus Matte Edition TVS Scooty Pep Plus Matte Edition