டிவிஎஸ் அப்பாச்சி RR 310 ஸ்போர்ட் பைக் டீசர் வெளியீடு – வீடியோ

0

TVS Apache RR 310 teaserதமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் சக்திவாய்ந்த முதல் ஸ்போர்ட்டிவ் பைக் மாடலாக டிவிஎஸ் அப்பாச்சி RR 310 ஸ்போர்ட் பைக் டிசம்பர் 6ந் தேதி அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RR 310 ஸ்போர்ட் பைக்

TVS Apache RR 310 racing

Google News

டிவிஎஸ் நிறுவனத்தின் 35 ஆண்டுகால டிவிஎஸ் ரேசிங் அனுபவத்துடன் பிஎம்டபிள்யூ மோட்டார்டு கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள அப்பாச்சி 310 ஸ்போர்ட்டிவ் பைக் பிஎம்டபிள்யூ G 310 R நேக்டு மாடலின் பின்புலத்தை பெற்றதாக வரவுள்ளது.

வருகின்ற டிசம்பர் 6ந் தேதி 11.00 மணி அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ள அப்பாச்சி 300 மிக சிறப்பான ஏரோடைனமிக் நுட்பத்தை பெற்ற இந்த பைக் மாடலில் G 310 R பைக்கில் இடம்பெற்றுள்ள 34 ஹெச்பி ஆற்றல் மற்றும் 27 என்எம் வெளிப்படுத்தும் வகையிலான 310சிசி எஞ்சின் இடம்பெற்றிருக்கும்.

முகப்பில் இரட்டை பிரிவுடன் கூடிய எல்இடி புராஜெக்டர் முகப்பு விளக்குடன் கூடிய பகல் நேர ரன்னிங் விளக்குகளை கொண்டதாக பெட்ரோல் டேங்கில் மிக நேர்த்தியாக ஸ்டிக்கரிங் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 டீசர் வீடியோ