டிவிஎஸ் அப்பாச்சி RR 310 ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுக தேதி விபரம்

0

tvs akula 310 bikeதமிழகத்தை சார்ந்த டிவிஎஸ் மோட்டார் கம்பெனி பிரிமியம் ரக சந்தையில் முதல் ஸ்போர்ட்டிவ் பைக் மாடலை டிவிஎஸ் அப்பாச்சி RR 310 என்ற பெயரில் டிசம்பர் 6ந் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RR 310

TVS Akula 310 concept

இந்தியாவில் நடுநிலை பிரிமியம் சந்தையில் மிகவும் சவாலான மோட்டார் சைக்கிள் மாடலை அறிமுகம் செய்யும் நோக்கில் டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனமும் இணைந்து முதல் நேக்டூ ஸ்போர்ட்டிவ் மாடலை பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் என்ற பெயரில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் ஸ்போர்ட்டிவ் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட அப்பாச்சி ஆர்ஆர் 310 என்ற பெயரில் சிவப்பு மற்றும் நீலம் ஆகிய இரண்டு நிறங்களில் ஒற்றை வேரியன்டில் மட்டுமே கிடைக்க உள்ளது. மிக சிறப்பான பாடி கிராபிக்ஸ் கொண்டதாக வர இருக்கின்ற மாடலில் நவீனத்துவமான ஏரோடைனமிக்ஸ் மற்றும் அதி சிறந்த கையாளுமை திறன் கொண்டதாக ஆர்ஆர் 310 விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எஞ்சின் விபரங்கள் பற்றி அதிகார்வப்பூர்வமான தகவல் வெளியாக நிலையில், பிஎம்டபிள்யூ G310 R ஸ்போர்ட்டிவ் நேக்டூ பைகில் உள்ள அதே 34 bhp ஆற்றல் மற்றும் டார்க் 28 Nm வெளிப்படுத்தும் 313சிசி எஞ்ஜினே டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் இடம்பெற்றிருக்கலாம்.

TVS Akula 310 bike

இணையத்தில் வெளிவந்துள்ள படங்களில் ஏபிஎஸ் எல்இடி ஹெட்லேப்ப், எல்இடி டெயில் விளக்கு போன்றவற்றை பெற்றிருப்பதுடன் ஜி 310 ஆர் பைக்கின் பாகங்களை பெற்றிருக்கலாம். முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக வரவுள்ள ஆர்ஆர் 310எஸ் பைக்கில் முன்புறத்தில் அமைந்துள்ள யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷன் தங்க நிறத்தில் அமைந்துள்ளது. அப்பாச்சி ஆர்ஆர் 310 எஸ் பைக்கில் ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் வரலாம்.

வருகின்ற டிசம்பர் 6ந் தேதி அதிகார்வப்பூர்வமாக டிவிஎஸ் அப்பாச்சி RR 310 ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

TVS Akula 310 concept front view TVS Akula 310 TVS Akula 310 bike TVS Akula 310 concept TVS Akula 310 concept rear seat