150 கிமீ ரேஞ்சு.., அல்ட்ராவைலெட் F77 எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்

0

Ultraviolette F77 electric bike

ரூ.3-3.25 லட்சம் ஆன்-ரோடு விலைக்குள் வெளியாக உள்ள அல்ட்ராவைலெட் F77 மிக சிறப்பான பெர்ஃபமென்ஸை வெளிப்படுத்துகின்ற ஸ்போர்டிவ் எலெக்ட்ரிக் பைக் மாடலாக அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 130-150 கிமீ பயணத்தையும், மணிக்கு அதிகபட்சமாக 147 கிமீ வேகத்தை வழங்க வல்லதாகும். லைட்டனிங், ஷேடோ மற்றும் லேசர் என மூன்று விதமான மாறபட்ட ஸ்டைலிங் அம்சங்களை பெற்று அல்ட்ராவைலெட் F77 வெளியிடப்பட்டுள்ளது.

Google News

பெங்களூருவில் முதன்முறையாக விற்பனைக்கு கிடைக்க உள்ள இந்நிறுவனத்தின் முதல் மாடலான எஃப்77 விற்பனை துவங்கப்பட்டு அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஆனலைன் முன்பதிவு இந்நிறுவன இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

எஃப் 77 எலெக்ட்ரிக் பைக்கில் காற்று மூலம் குளிரூட்டப்பட்கின்ற மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, அதிகபட்சமாக 25 கிலோவாட் (33.5 ஹெச்பி) 2,250 ஆர்.பி.எம் வேகத்தில் உற்பத்தி செய்கிறது மற்றும் 90 என்.எம் டார்க் வழங்குகின்றது. F77  பைக் 2.9 விநாடிகளில் 0-60 கிமீ எட்டுவதுடன், 0-100 கிமீ வேகத்தை 7.5 விநாடிகளில் எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது., இந்த பைக் மணிக்கு 147 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது. எஃப்77 பைக்கில் ஒற்றை டிரான்ஸ்மிஷன் கொண்டு ஈக்கோ, ஸ்போர்ட் மற்றும் இன்சேன் என மூன்று விதமான சவாரி நிலைகளை கொண்டுள்ளது.

இந்த மாடலில் உள்ள மோட்டாரை இயக்குவதற்கு நீக்கும் வகையிலான 3 லித்தியம் அயன் பேட்டரி பேக்குகளுடன் இணைக்கப்பட்ட 4.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. நிலையான சார்ஜர் வழியாக முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரமும், வேகமான சார்ஜர் வாயிலாக 1.5 மணி நேரத்தில் சார்ஜ் ஏற்ற இயலும். இந்த பைக்கினை இயக்க மூன்று பேட்டரி பேக்குகளும் பொருத்தப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் 130-150 கிமீ பயணிக்க வேண்டுமெனில் நிச்சியமாக மூன்று பேட்டரி பேக்குகளும் பொருத்தப்பட வேண்டும்.

பேட்டரி அமைப்பின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வெப்ப மற்றும் பேட்டரி மேலாண்மை அம்சங்களின் விரிவான பாதுகாப்பு மற்றும் சில காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Ultraviolette F77

பொதுவாக ஐசி என்ஜின் பெற்ற பைக்குகளின் அமைப்பினை போன்றே எஃப் 77 ஸ்டீல் ஃபிரேம் சட்டகத்தைப் பயன்படுத்துகிறது. மிகவும் ஸ்டைலிஷான பேனல்கள் டிசைனாக இணைக்கப்பட்டு எல்இடி விளக்குகள், 9-அச்சு IMU, டிஎஃப்டி டிஜிட்டல் கிளஸ்ட்டரை கொண்டுள்ளது.  இந்த பைக்கில் முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 230 மிமீ டிஸ்குடன் பின்புறத்தில் பெற்ற இரட்டை சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.  செயல்திறன் சார்ந்த நோக்கங்களுக்காக 110/70 R17 (முன்) மற்றும் 150/60 R17 (பின்புற) டயர்களைப் பெறுகிறது.

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் இணைப்பையும், பிரத்யேக ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கொண்டிருக்கும். இது வரம்பு, பேட்டரி சதவீதம், சராசரி வேகம் மற்றும் இருப்பிடம் போன்ற பயனுள்ள சவாரி தகவல்களைக் காண்பிக்கும். இது உள்ளமைக்கப்பட்ட சென்சார்கள், இம்பேக்ட் சென்சார் மற்றும் அவசர தொடர்பு எச்சரிக்கை கொண்டுள்ளது. ஆப் வாயிலாக பல்வேறு செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.

அல்ட்ராவைலெட் F77 மாடலுக்கு, பைக் தயாரிப்பாளர் சிறிய வேகமான சார்ஜர், சார்ஜிங் பாட், கிராஷிங் கார்ட்ஸ் மற்றும் பேனியர் போன்ற ஆக்செரிஸ்களை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

Ultraviolette F77 electric