வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களில் பாதுகாப்பு வசதி அறிமுகம்

0

aprilia sr 150

பியாஜியோ நிறுவனத்தின் ஏப்ரிலியா, வெஸ்பா ஸ்கூட்டர்களில் 125சிசிக்கு மேற்பட்ட மாடல்களான அப்ரிலியா SR150, வெஸ்பா SXL மற்றும் வெஸ்பா VXL 150 ஆகிய மாடல்களில் ஏபிஎஸ் பிரேக் மற்றும் அப்ரிலியா SR125, வெஸ்பா 125 ஆகிய இரு மாடல்களில் சிபிஎஸ் பிரேக் பெற்றுள்ளது.

Google News

ஏப்ரல் மாதம் முதல் நாட்டில் 125சிசிக்கு குறைந்த என்ஜின் பெற்ற  இரு சக்கர வாகனங்களில் சிபிஎஸ் எனப்படுகின்ற கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் 125சிசி க்கு மேற்பட்ட என்ஜின் கொண்ட மாடல்களில் ஏபிஎஸ் எனப்படுகின்ற பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு பெற்றதாக விற்பனை செய்யப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான இரு சக்கர வாகனங்களில் இந்த நுட்பம் நடைமுறைக்கு வந்துள்ளது.

வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர் மாடல்கள்

இந்திய சந்தையில் மிகவும் ஸ்டைலிஷான் ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர்கள் மற்றும் ரெட்ரோ ஸ்டைல் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் ஏப்ரிலியா மற்றும் வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்களை இந்நிறுவனத்தின் தலைமையான பியாஜியோ விற்பனை செய்து வருகின்றது.

Aprilia SR Motard 125

ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்ட வெஸ்பா 150 வரிசை

வெஸ்பா VXL 150 – ரூ.1 லட்சம்

வெஸ்பா SXL 150 – ரூ. 1.04 லட்சம்

வெஸ்பா SXL 150 மேட் – ரூ.1.05 லட்சம்

வெஸ்பா எலீகன்ட் – ரூ.1.10 லட்சம்

125 சிசி பைக் வெஸ்பா வரிசை சிபிஎஸ் மாடல்கள்

வெஸ்பா நோட் – ரூ.72,030

வெஸ்பா LX – ரூ. 76,273

வெஸ்பா VXL – ரூ. 89,895

வெஸ்பா SXL – ரூ.93,192

வெஸ்பா SXL மேட் – ரூ.94,264

அப்ரிலியா 125சிசி சிபிஎஸ் பிரேக் மாடல் அப்ரிலியா SR 125 விலை 71,224

அப்ரிலியா SR 150 ஏபிஎஸ் பிரேக் மாடல் விலை 82,317

அப்ரிலியா SR 150 ரேஸ் ஏபிஎஸ் பிரேக் மாடல்  விலை 91,271

(தொகுக்கப்பட்டுள்ள விலை பட்டியல் எக்ஸ்-ஷோரூம் புனே )

Vespa Notte 125