சியோமி வெளியிட்ட இ பைக் இந்தியாவில் விற்பனைக்கு வருமா..!

சியோமி இ பைக்

இந்தியாவின் முதன்மையான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக விளங்கும் சியோமி நிறுவனம், சீனாவில் ஹிமோ C20 என்ற இ பைக் மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த பைக் மாடல் விலை இந்திய ரூபாய் மதிப்பின் படி ரூ.26,000 ஆகும்.

சியோமி நிறுவனம், மொபைல் போன் மட்டுமல்லாமல் வீட்டு உபயோக பொருட்கள் உட்பட எண்ணற்ற தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றது. அந்த வரிசையில் Himo C20 என்ற இ பை-சைக்கிள்  மாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சியோமி இ பைக் விலை மற்றும் வருகை விபரம்

முதற்கட்டமாக சீனாவில் வெளியிடப்பட்டுள்ள இந்த இ சைக்கிள் மாடல் மிக சிறப்பான பேட்டரி திறன் மற்றும் 80 கிமீ தூரம் வரை பயணிக்க உதவும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும் இந்த இ பைக்கில் 36V 10Ah லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இந்த பேட்டரியின் எடை வெறும் 2.5கிலோ தான் இதன் வாயிலாக 360Wh சக்தியை சேகரிக்கும் திறன் கொண்டதாக அமைந்திருக்கின்றது.

முழுமையான பேட்டரி சார்ஜிங் போது அதிகபட்சாக 80 கிமீ தூரம் வரை பயணிக்க இயலும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜிங் செய்வதற்கு அதிகபட்சமாக 6 மணி நேரம் தேவைப்படும்.

25 கிமீ வேகத்தில் பயணிக்க உதவும் வகையில் இந்த சியோமி இ பைக் மாடலில்  250வாட் திறன் கொண்ட டிசி பிரஸ்லெஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் மூன்று முறையில் பெடல் அசிஸ்ட்டும், 6 ஸ்பீடு சிமனோ கியர் ஷிஃப்ட்  உள்ளது.

எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட்டு உடன் கூடிய ஹிமோ சி20 மாடலில் உள்ள எல்இடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வாயிலாக வேகம், கிலோ மீட்டர் விபரம், பெடல் அசிஸ்ட் லெவல், பேட்டரி பவர் மற்றும் சார்ஜிங் அளவு போன்றவற்றை பெற இயலும்.

இந்தியாவில் விற்பனைக்கு வெளிவரும் வாய்ப்புகள் குறித்து அதிகார்வப்பூர்வ தகவல் இல்லை. எனவே அடுத்த ஆண்டின் மத்தியில் இந்தியாவின் இ பைக் சந்தை விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் சியோமி இ பைக் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம்.