யமஹா ஃபேஸர் 25 பைக் விலை மற்றும் முழுவிபரம்

சமீபத்தில் விற்பனைக்கு வந்த யமஹா FZ25 பைக் பின்னணியாக வந்துள்ள ஃபேரிங் செய்யப்பட்டுள்ள யமஹா ஃபேஸர் 25 பைக் முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் விலை ரூ.1.29 லட்சம் ஆகும்.

யமஹா ஃபேஸர் 25  பைக்

ஃபேஸர் 1000 சூப்பர் பைக் மாடலின் தோற்ற உந்துதலை அடிப்படையாக கொண்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள 250சிசி எஞ்சின் பெற்ற பேஸர் 250 பைக் டைமன்ட் ஃபிரேம் சேஸீ கொண்டு  ஏரோடைனமிக் கவுல் மற்றும் விண்ட் புராடெக்டர் டிசைன் பெற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரு விதமான நிற கலவையில் கிடைக்க உள்ள ஃபேஸர் 25 பைக்கில் சியான் (Soulful Cyan) எனப்படும் நிறத்தில் கிரே மற்றும் நீலம் , மற்றொரு நிறமான சிவப்பு நிறத்தில் (Rhythmic Red) சிவப்பு மற்றும் தங்க நிறம் கலந்துள்ளது.

எல்இடி ஹெட்லேம்ப் வசதியுடன் வந்துள்ள இந்த பைக்கில் ஸ்ப்ளிட் செய்யப்பட்ட இருக்கைகள், குரோம் பூச்சினை பெற்ற எக்ஸ்ஹாஸ்ட் , எல்சிடி இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் டிரிப்மீட்டர், ஸ்பீடோமீட்டர், ஃப்யூவல் காஜ் மற்றும் டேக்கோமீட்டர் ஆகியவற்றை பெற்றதாக உள்ளது.

அதிகப்படியாக 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபேஸர் 250 பெட்ரோல் டேங்க் வார இறுதிநாட்களில் நீண்ட தொலைவு பயணம்மேற்கொள்ளும் ரசிகர்களுக்கு ஏற்ற பைக்காக அதாகபட்சமாக ஒருமுறை டேங்கினை நிரப்பினால் 600 கிமீ வரை பயணிக்கலாம். இந்த பைக்கின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 43 கிமீ என கணக்கிடப்பட்டுள்ளது.

எஞ்சின்

யமஹாவின் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் கூடிய சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

யமஹா ஃபேஸர் 25 பைக் மைலேஜ் லிட்டருக்கு 43 கிமீ ஆகும்.

Fazer 25 பைக்கில் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது. ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படவில்லை.

ஃபேஸர் 25 விலை

யமஹா ஃபேஸர் 25 பைக் விலை ரூ.1.29,335 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Recommended For You