யமஹா FZ-FI, FZS-FI பைக்குகள் திரும்ப அழைப்பு

0

Yamaha FZ-s darknight

சமீபத்தில் விற்பனைக்கு வந்த பிஎஸ் 6 யமஹா எஃப்இசட் மற்றும் எஃப்இசட்-எஸ் எஃப்ஐ மாடல்கள் இந்தியாவில் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் முதல் விற்பனை செய்யப்பட்ட 7757 யூனிட் பைக்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் இருக்க வேண்டிய பிரதிபலிப்பான் பொருத்தாமல் விடுபட்ட மாடல்கள் மட்டும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பைக்குகள் அக்டோபர் 2019 முதல் தயாரிக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. பைக்குகளின் உரிமையாளர்களை யமஹா டீலர்ஷிப்களால் தனித்தனியாக தொடர்பு கொள்ளப்படுவார்கள். எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட யமஹா டீலர்ஷிப்பிலும் பைக்குகளில் ரிஃபெளெக்டார் இலவசமாக பொருத்தி தரப்பட உள்ளது.

இந்த திரும் அழைப்பு, பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டிய ஒரு பகுதியாகும். யமஹா FZ-FI, FZS-FI என இரு மாடல்களிலும் 149 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 7250 ஆர்.பி.எம்மில் 12.4 ஹெச்பி மற்றும் 5500 ஆர்.பி.எம்மில் 13.6 என்.எம் டார்க் கொண்டுள்ளது. இந்த பைக் ஒற்றை சேனல் ஏபிஎஸ் உடன் முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குடன் வருகிறது.