யமஹா FZ வெர்ஷன் 3.0 விற்பனைக்கு வெளியானது – Yamaha FZ V3.0

0

yamaha fz s

புதிதாக ஏபிஎஸ் பிரேக் உடன் கூடிய புதிய யமஹா FZ வெர்ஷன் 3.0 மாடலை இந்தியாவில் விற்பனைக்கு யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. புதிய யமஹா FZ-FI விலை ரூ.95,000 ஆகும்.

முந்தைய மாடலை விட முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட FZ-Fi மற்றும் FZS-Fi மாடல்களில் மிகவும் ஸ்டைலிஷான இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லைட் பெற்றிருக்கின்றது. இந்த மாடல் முந்தைய வெர்ஷன் 2.0 மாடலை விட பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

யமஹா FZ

புதிய மாடலில் என்ஜின் பவர் மற்றும் டார்கில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. எனவே யமஹா எஃப்இசட்-எஸ் மற்றும் எஃப்இசட் வெர்ஷன் 3.0 பைக்கில் 13.2 bhp ஆற்றல், 12.8 Nm டார்க் வெளிப்படுத்துhகிற 149cc ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

yamaha fz s v 3.0 headlight

விற்பனையில் உள்ள எஃப்இட்25 பைக்கின் வடிவ தாத்பரியங்களை பெற்ற புதிய மாடல் இரு பிரிவை பெற்ற எல்இடி ஹெட்லேம்ப், நேர்த்தியான புதுப்பிக்கப்பட்ட பெட்ரோல் டேங்க் டிசைன், புதிய மட்கார்டு, இரட்டை பிரிவு இருக்கைக்கு மாற்றாக ஒற்றை இருக்கை வசதி, முன்புறத்தில் டிஸ்க் பிரேக்குடன் இணைக்கப்பட்ட சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்றிருக்கலாம்.

முந்தைய எல்சிடி இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் புதுப்பிக்கப்பட்டு கூடுதல் வசதிகளை பெற்ற மாடலாக வந்துள்ளது. பின்புறத்தில் புகைப்போக்கி ஸ்டைல், கிராப் ரெயில்  மற்றும் டெயில் லைட் ஆகியவற்றை யமஹா புதுப்பித்துள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் 282 டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் உடன் மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றிக்கும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரதரமாக இணைக்கப்பட்டுள்ளது.

Yamaha FZ V3.0 price list

யமஹா FZ FI ABS பிரேக் விலை ரூ.95,000

யமஹா FZS FI ABS பிரேக் விலை ரூ.97,000

(எக்ஸ்-ஷோரூம் விலை டெல்லி)

yamaha fz s side

முந்தைய எஃப்இசட் மாடலை விட ரூ. 13,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல எஃப்இசட் எஸ் மாடலை விட ரூ.8,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் 160, ஹோண்டா ஹார்னெட் 160, சுசூகி ஜிக்ஸர், மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ஆகிய மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.