புதிய நிறத்தில் யமஹா FZ-S Fi, சல்யூடோ RX, சிக்னஸ் ரே ZR அறிமுகம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு டார்க் நைட் எடிசன் என்ற பெயரில் யமஹா FZ-S Fi, யமஹா சல்யூடோ RX மற்றும் யமஹா சிக்னஸ் ரே ZR ஆகிய மாடல்களில் மேட் பிளாக் நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யமஹா டார்க் நைட் எடிசன்

விநாயகர் சதுர்த்தி, வரவுள்ள விஜய தசமி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு டார்க் நைட் எடிசன் மாடலை பிரத்தியேகமாக இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

யமஹா FZ-S Fi, யமஹா சல்யூடோ RX மற்றும் யமஹா சிக்னஸ் ரே ZR வெளியாகியுள்ள மூன்று மாடல்களில் மேட் பிளாக் நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய டார்க் நைட் எடிசன் சாதாரண மாடலை விட ரூ. 1000 வரை விலை கூடுதலாக அமைந்திருக்கும்.

யமஹா FZ-S Fi பைக்கில் 149 cc ஒற்றை சிலிண்டர் ஃப்யூவல் இன்ஜெக்டேட் எஞ்சின் பொருத்தப்பட்டு 13 bhp பவரை வெளிப்படுத்துவதுடன், 12.8 Nm டார்கினை வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

தொடக்க நிலை 110சிசி சந்தையில் உள்ள யமஹா சல்யூடோ RX  பைக்கில் 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 7 bhp பவரை வெளிப்படுத்துவதுடன், 8.5 Nm டார்கினை வழங்குகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

சிக்னஸ் ரே இசட்ஆர் டிஸ்க் பிரேக் வேரியன்டில் மட்டுமே கிடைக்கின்ற மேட் பிளாக் நிறத்தில் 113சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 7 bhp பவரை வெளிப்படுத்துவதுடன், 8.1 Nm டார்கினை வழங்குகின்றது. இதில் சிவிடி ஆட்டோ கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

 

நாட்டில் உள்ள அனைத்து டீலர்களிடமும் கிடைக்க தொடங்கியுள்ள சிறப்பு டார்க் நைட் எடிசன் சாதாரண மாடல்களை விட ரூ. 1000 வரை கூடுதலாக அமைந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. சமீபத்தில் யமஹா நிறுவனம் தொடக்கநிலை பிரிமியம் சந்தையில் நேக்டூ ஸ்போர்ட்டிவ் யமஹா FZ25 மற்றும் யமஹா ஃபேஸ்ர் 25 பைக்குகளை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

Recommended For You