யமஹா FZ25, யமஹா ஃபேஸர் 25 பைக்குகள் திரும்ப அழைப்பு

yamaha fazer 25 side viewஇந்தியா யமஹா மோட்டார் நிறுவனம், கடந்த ஜனவரி 2017-ல் வெளியிட்ட யமஹா எஃப்இசட் 25 மற்றும் அதனை தொடர்ந்து வெளியான ஃபுல் ஃபேரிங் மாடலான யமஹா ஃபேஸர் 25 ஆகிய பைக்குகளில் சுமார் 23 ஆயிரத்து 897 பைக்குகளை திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளது.

யமஹா FZ25, யமஹா ஃபேஸர் 25

yamaha fz 25

 

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருந்த சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் ஃபேஸர் 25 மற்றும் FZ25 ஆகிய இருமாடல்களிலும் எஞ்சின் ஹெட் போல்ட் தானாக கழன்று கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு கானும் நோக்கில் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட 21 ஆயிரத்து 640 யமஹா எஃப்இசட் 25 பைக்குகள் மற்றும் 2 ஆயிரத்து 257 ஃபேஸர் 25 பைக்குகளையும் திரும்ப அழைக்க உள்ளது.

இதற்கான தீர்வினை வழங்கும் நோக்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட யமஹா சர்வீஸ் சென்டர்களிலும் எவ்விதமான கட்டணமும் இல்லாமல் இப்பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்பட உள்ளது.

மேலதிக விபரங்களுக்கு அருகாமையில் உள்ள டீலரை அனுகவும்.

எஞ்சின்

இரு பைக்குகளிலும் யமஹாவின் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் கூடிய சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

யமஹா ஃபேஸர் 25 மற்றும் எஃப்இசட் 25 பைக் மைலேஜ் லிட்டருக்கு 43 கிமீ ஆகும்.

Fazer 25, எஃப்இசட் 25  பைக்கில் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது.

yamaha fazer 25 bike