Automobile Tamilan
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • EV News
  • Stories
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
Automobile Tamilan
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • EV News
  • Stories
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result
Home செய்திகள் பைக் செய்திகள்

₹.1.98 லட்சத்தில் யெஸ்டி பைக்குகள் விற்பனைக்கு வந்தது

by Automobile Tamilan
2022/01/13
in பைக் செய்திகள்
0
75
SHARES
ShareRetweet

Yezdi Adventure

You might also like

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் ₹ 1.50 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் படங்கள் வெளியானது

2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R ரூ.1,17,323 விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது

மஹிந்திரா நிறுவனம் யெஸ்டி பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ரோட்ஸ்டெர், அட்வென்ச்சர், மற்றும் ஸ்கிராம்பளர் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

யெஸ்டி பைக்

Roadster, Scrambler & Adventure மூன்று மாடல்களும் 334சிசி, சிங்கிள்-சிலிண்டர், DOHC, லிக்விட் கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்பட்டாலும்,  ஒவ்வொன்றும் வெவ்வேறு ட்யூன் நிலையில், சற்று மாறுபட்ட பவர் மற்றும் டார்க் மாறுபடுகின்றது. இதேபோல், ஒவ்வொரு பைக்கிலும் வெவ்வேறு சஸ்பென்ஷன் மற்றும் வீல் அளவுகள், மற்ற வேறுபாடுகளுடன் தனித்துவமான சேஸ் உள்ளது.

மூன்று மாடல்களும் LED ஹெட்லைட் மற்றும் டெயில்-லேம்ப் ஆகியவற்றைப் பெற்று டூயல் கார்டிள் சேஸ் உடன் வடிவமைக்கப்பட்டு, பிரேக்கிங் அமைப்பில் 320 மிமீ முன்புற டிஸ்க் மற்றும் 240 மிமீ பின்புற டிஸ்க் உடன் இரண்டு மிதக்கும் காலிப்பர்கள் பெற்று இரட்டை சேனல் ஏபிஎஸ் உடன் வருகின்றன.

Yezdi Roadster Dark

யெஸ்டி ரோட்ஸ்டர்

க்ரூஸர் பைக் ஸ்டைலை பெற்றுள்ள ரோட்ஸ்டெர் மாடல் க்ரோம் மற்றும் டார்க் என இரண்டு நிறங்களில் கிடைக்கின்றது. குறிப்பாக ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கின நேரடியாக எதிர் கொள்கின்ற வகையில் உள்ளது. இந்த மாடலை பொறுத்தவரை மிக நேர்த்தியான வடிவமைப்பில் கொடுத்துள்ளனர்.

334cc இன்ஜின் மூலம் இயக்கப்பட்டு 7300 RPM இல் 29.7 PS மற்றும் 6500 RPM இல் 29 Nm டார்க் உருவாக்குகிறது. அதே நேரத்தில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது.

டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் (135 மிமீ பயணம்) மற்றும் கேஸ் சார்ஜ் செய்யப்பட்ட இரட்டை ஷாக் அப்சார்பர் (100 மிமீ பயணம்) மற்றும் 175 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

18-இன்ச் முன் சக்கரம் (100/90-பிரிவு டயர்) மற்றும் 17-இன்ச் பின்புற சக்கரம் (130/80-பிரிவு டயர்) பெற்று 1440 மிமீ வீல்பேஸ், 790 மிமீ இருக்கை உயரம், 12.5 லிட்டர் எரிபொருள் கலன் மற்றும் 184 கிலோ எடை கொண்டுள்ளது.

Yezdi Roadster price list –

Variant/Colour Price
Roadster Dark – Smoke Grey Rs. 1,98,142/-
Roadster Dark Hunter Green Rs. 2,02,142/-
Roadster Dark Steel Blue Rs. 2,02,142/-
Roadster Chrome Gallant Grey Rs. 2,06,142/-
Roadster Chrome Sin Silver Rs. 2,06,142/-

Prices are ex-showroom, Delhi

Yezdi Scrambler Dual Tone

யெஸ்டி ஸ்கிராம்பளர்

இந்த மாடலில் 334cc இன்ஜின் மூலம் இயக்கப்பட்டு 8000 RPM இல் 29.1 PS மற்றும் 6750 RPM இல் 28.2 Nm டார்க் உருவாக்குகிறது. அதே நேரத்தில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது.

ஸ்போக் 19-இன்ச் முன் சக்கரம் (100/90-பிரிவு டயர்) மற்றும் 17-இன்ச் பின்புற வீல் (140/70-பிரிவு டயர்), பைக்கில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் (150 மிமீ பயணம்) மற்றும் கேஸ்-சார்ஜ் செய்யப்பட்ட இரட்டை பின்புற ஷாக் அப்சார்பர் (130 மிமீ பயணம்) பெற்றுள்ளது.

ரோட்ஸ்டரைப் போலல்லாமல், இந்த பைக்கில் 3 ஏபிஎஸ் முறைகள் (Rain, Road & Off-road), 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 1403 மிமீ வீல்பேஸ், 800 மிமீ இருக்கை உயரம் மற்றும் 182 கிலோ எடை, அதே 12.5 லிட்டர் எரிபொருள் கலன் உள்ளது.

Yezdi Scrambler price list –

Colour Price
Fire Orange Rs. 2,04,900/-
Yelling Yellow Rs. 2,06,900/-
Outlaw Olive Rs. 2,06,900/-
Mean Green Rs. 2,10,900/-
Midnight Blue Rs. 2,10,900/-
Rebel Red Rs. 2,10,900/-

Prices are ex-showroom, Delhi

Yezdi Adventure

யெஸ்டி அட்வென்ச்சர்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு நேரடி போட்டியாக அமைந்துள்ள அஃவென்ச்சரில் புளூடூத் இணைப்பு மற்றும் டர்ன்-பை-டர்ன் வழிசெலுத்தலுடன் கூடிய எல்சிடி டேஷ், பிரத்யேக ஆப் மற்றும் பேட்டரி இருப்பினை வழங்குகிறது.

அட்வென்ச்சர் மாடலில் 334cc இன்ஜின் மூலம் இயக்கப்பட்டு 8000 RPM இல் 30.2 PS மற்றும் 6500 RPM இல் 29.9 Nm டார்க் உருவாக்குகிறது. அதே நேரத்தில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது.

 

Yezdi Adventure price list –

Colour Price
Slick Silver Rs. 2,09,900/-
Mambo Black Rs. 2,11,900/-
Ranger Camo Rs. 2,18,900/-

 

Tags: Yezdi AdventureYezdi RoadsterYezdi Scrambler
Share30Tweet19SendShare

Recommended For You

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் ₹ 1.50 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது

by Automobile Tamilan
2022/08/07
0
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் ₹ 1.50 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது

மிக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட புதிய மாடலான ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் அறிமுகப்படுத்தியுள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ஒரு ரோட்ஸ்டர் ஸ்டைல் மோட்டார்சைக்கிள் மற்றும் ராயல் என்ஃபீல்டு வரிசையில் புதிய தொடக்க மாடலாக விளங்குகிறது. ஹண்டர்...

Read more

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் படங்கள் வெளியானது

by Automobile Tamilan
2022/08/07
0
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் படங்கள் வெளியானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய ஹண்டர் 350 பைக்கின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அண்டர் 350 மாடல் 350 சிசி இன்ஜினை பகிர்ந்து கொண்டு மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி...

Read more

2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R ரூ.1,17,323 விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது

by Automobile Tamilan
2022/07/27
0
2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R ரூ.1,17,323 விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 160R பைக்கின் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய அம்சங்களுடன் விற்பனைக்கு கொன்டு வந்துள்ளது. Xtreme 160R மாடலில் டேஷ்போர்டில் புதிய கியர்-பொசிஷன் இண்டிகேட்டரைப் பெறுகிறது. இந்த மோட்டார் சைக்கிள் சேடில் திருத்தப்பட்ட...

Read more

₹.1.49 லட்சத்தில் டிவிஎஸ் ரோனின் பைக் விற்பனைக்கு வந்தது

by Automobile Tamilan
2022/07/06
0
₹.1.49 லட்சத்தில் டிவிஎஸ் ரோனின் பைக் விற்பனைக்கு வந்தது

தொலைதூர பயணத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ரோனின் பைக்கின் விலை ரூ.1.49 லட்சம் துவங்குகிறது. ஸ்க்ராம்ப்ளர் மற்றும் கஃபே ரேசர் மோட்டார்சைக்கிள் இடையிலான கலவையை போல் தெரிகிறது. பைக்கில் வட்ட வடிவ ஹெட்லைட், புதிய...

Read more

டிவிஎஸ் ரோனின் பைக்கின் படங்கள் கசிந்தது

by Automobile Tamilan
2022/07/04
0
டிவிஎஸ் ரோனின் பைக்கின் படங்கள் கசிந்தது

வரும் ஜூலை 6 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள டிவிஎஸ் ரோனின் பைக்கின் படங்கள் கசிந்துள்ளது. மிக நேர்த்தியான ரெட்ரோ வடிவத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. Ronin 225 பைக்கில் பவர்டிரெய்ன் 223சிசி சிங்கிள்-சிலிண்டர் மோட்டாராக இருக்கக்கூடும். இது 20...

Read more
Next Post
ஜனவரி 26.., டார்க் கிராடோஸ் இ-பைக் விற்பனைக்கு வருகின்றது

ஜனவரி 26.., டார்க் கிராடோஸ் இ-பைக் விற்பனைக்கு வருகின்றது

Related News

தானியங்கி முகப்பு விளக்குகள் கட்டாயம் – இருசக்கர வாகனம்

2019/02/01
ரெனால்ட் க்விட்

ரூ.4.16 லட்சத்தில் ரெனால்ட் க்விட் RXL விற்பனைக்கு வெளியானது

2020/07/06

இசுசூ கார்கள் மற்றும் பிக்கப் டிரக் விலை குறைப்பு – ஜிஎஸ்டி வரி

2019/02/01

Browse by Category

  • Auto Expo 2023
  • Auto Show
  • Bus
  • Car & Bike Videos
  • Car and Bike Photos Tamil
  • Car Reviews
  • EV News
  • TIPS
  • Truck
  • Wired
  • கார் செய்திகள்
  • செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • #59908 (no title)
  • About Us
  • Auto news in Tamil
  • Contacts Us
  • Fact-Checking Policy
  • Home
  • Homepage for Amp
  • Latest News
  • Meet The Team
  • My Bookmarks
  • Privacy Policy
  • Sample Page
  • Sitemap

© 2022 Automobile Tamilan

No Result
View All Result
  • #59908 (no title)
  • About Us
  • Auto news in Tamil
  • Contacts Us
  • Fact-Checking Policy
  • Home
  • Homepage for Amp
  • Latest News
  • Meet The Team
  • My Bookmarks
  • Privacy Policy
  • Sample Page
  • Sitemap

© 2022 Automobile Tamilan

Add Automobile Tamilan to your Homescreen!

Add
Go to mobile version