இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து பிஎம்டபிள்யூ கார்களின் விலையும் 3% வரை மூலப்பொருட்களின் விலை உட்பட பல்வேறு காரணங்களால் உயருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ குழம இந்தியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. விக்ரம் பவா கூறுகையில், தொடர்ச்சியான அந்நிய செலாவணி தாக்கம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி, போக்குவரத்து செலவுகள் போன்ற காரணிகள் மூலப்பொருள் மற்றும் மற்ற இதர செலவுகளின் காரணமாக விலை உயர்வை தவிர்க்க இயலவில்லை என குறிப்பிட்டுள்ளார், மேலும், “இந்த ஆண்டின் முதல் பாதியில் BMW இந்தியாவின் வளர்ச்சி மற்றும் விற்பனை வேகம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது” என குறிப்பிட்டார்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் கார்களின் வரிசையில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் லாங் வீல்பேஸ், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் லாங் வீல்பேஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், பிஎம்டபிள்யூ X1, பிஎம்டபிள்யூ X3, பிஎம்டபிள்யூ X5, பிஎம்டபிள்யூ X7, பிஎம்டபிள்யூ M340i மற்றும் பிஎம்டபிள்யூ iX1 லாங் வீல்பேஸ் ஆகியவை அடங்கும்.
பிஎம்டபிள்யூ i4, பிஎம்டபிள்யூ i5, பிஎம்டபிள்யூ i7, பிஎம்டபிள்யூ i7 M70, பிஎம்டபிள்யூ iX, பிஎம்டபிள்யூ Z4 M40i, பிஎம்டபிள்யூ M2 கூபே, பிஎம்டபிள்யூ M4 காம்பெட்டிஷன், பிஎம்டபிள்யூ M4 CS, பிஎம்டபிள்யூ M5, பிஎம்டபிள்யூ M8 காம்பெட்டிஷன் கூபே மற்றும் பிஎம்டபிள்யூ XM (பிளக்-இன்-ஹைப்ரிட்) ஆகியவற்றை CBU முறையில் வழங்குகிறது.