Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
Rudratej Singh : பிஎம்டபிள்யூ இந்தியா தலைவர் ருத்ரதேஜ் சிங் மறைவு

பிஎம்டபிள்யூ இந்தியா தலைவர் ருத்ரதேஜ் சிங் மறைவு

86888 mr rudratej singh president and chief executive officer bmw group india

பிஎம்டபிள்யூ இந்தியா தலைவர் மற்றும் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வந்த ரூடி என அன்பாக அழைக்கப்படுகின்ற ருத்ரதேஜ் சிங் இன்று காலை திடீரென்று ஏற்பட்ட கார்டியாக் அரெஸ்ட் காரணமாக மறைந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1 , 2019 முதல் பிஎம்டபிள்யூ, பிஎம்டபிள்யூ மோட்டார்டு மற்றும் மினி கார் நிறுவனங்களின் தலைவராக செயல்பட்டு வந்தார். இதற்கு முன்பாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

25 ஆண்டுகால ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் சாராத துறைகளில் அனுபவமிக்கவராக விளங்கும் ருத்ரதேஜ் சிங், முன்பாக பிரபலமான மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக விளங்கியவர். கடந்த ஜனவரி மாதம் என்ஃபில்டு நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

ஆட்டோமொபைல் தமிழன் இணையதளம் சார்பாக.., ருத்ரதேஜ் சிங் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Exit mobile version