ஃபெராரி 488 GTB விற்பனைக்கு வந்தது

0

இந்தியாவில் ஃபெராரி 488 GTB ஸ்போர்ட்டிவ் கார் ரூ. 3.88 கோடி விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபெராரி நிறுவனத்தின் டிசைன் இல்லத்திலே வடிவமைக்கப்பட்ட 488 GTB கார் கடந்த வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

ferrari 488 GTB

Google News

சிறப்பான ஸ்போர்ட்டிவ் தோற்ற அமைப்புடன் முகப்பு விளக்குகளுடன் எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ளது. பக்கவாட்டில் சிறப்பான கோடுகளுடன் நேர்த்தியாக கவர்ச்சியான அம்சங்களுடன் 488 ஜிடிபி விளங்குகின்றது.

புதிய டிசைன் தாத்பரியங்களுடன் லாஃபெராரி காரின் உந்துதலை தழுவிய சில தோற்ற அமசங்களை பெற்ற  மாடலாக வந்த  488 GTB காரில் 661 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 3.9 லிட்டர் வி8 டர்போசார்ஜ்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 760 Nm ஆகும். இதில் 7 வேக டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3 விநாடிகளும் , 0 முதல் 200 கிமீ வேகத்தினை எட்ட 8.3 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். ஃபெராரி 488 GTB உச்ச வேகம் மணிக்கு 330 கிமீ ஆகும்.

கடந்த வருடத்தில் அதிகாரவப்பூர்வமாக நேரடியாக டீலர்களை அமைந்து களமிறங்கிய பின்னர் ஃபெராரி நிறுவனம் தனது டீலர்கள் வாயிலாக சிறப்பான சேவையை வழங்கி வருகின்றது.

ஃபெராரி 488 GTB ஸ்போர்ட்டிவ் கார் விலை ரூ. 3.88 கோடி

( டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )

[envira-gallery id="7113"]