ஆல்ட்டோ – M.S.தோனி படத்தின் சிறப்பு எடிசன் அறிமுகம்

0

மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஆல்ட்டோ காரின் அடிப்படையில் புதிய சிறப்பு பதிப்பாக வரவுள்ள M.S.தோனி – The Untold Story படத்தின் பெயரில் சிறப்பு எடிசனை வெளியிட்டுள்ளது.  தோனி பட சிறப்பு எடிசன் அக்டோபர் முதல் வாரத்தில் கிடைக்கும்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படமான M.S தோனி வருகின்ற செப்டம்பர் 30ந் தேதி (2016-09-30) வெளியாக உள்ள நிலையில் பலதரப்பட்ட சிறப்பு ப்ரமோக்கள் நடந்து வருகின்றது. அந்த வரிசையில் இந்தியாவின் முன்னனி தயாரிபாளரான மாருதி சுஸூகி நிறுவனம் ஆல்ட்டோ (Lxi) மற்றும் ஆல்ட்டோ கே10 (Lxi & Vxi) வேரியண்டில் கூடுதல் துனைகருவிகள் மற்றும் பாடி ஸ்டிக்கரிங் சேர்க்கப்பட்டுள்ளது.

Google News

M.S தோனி சிறப்பு பதிப்பு

பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஆல்ட்டோ காரில் கூடுதலாக ரூ.16,777 மற்றும் ஆல்ட்டோ கே10 காரில் கூடுதலாக ரூ.12,777 விலையிலும் துனைகருவிகள் சேர்க்கப்பட்டுள்ளது. தோற்ற அமைப்பில் M.S தோனி கையொப்பம் கொண்ட ஸ்டிக்கரிங் மற்றும் பாடி கிராஃபிக்ஸ் மற்றும் இன்டிரியரில் எண் #7 என ஸ்டிச்சிங் செய்யப்பட்ட இருக்கை கவர் , சிங்கிள் டின் ரேடியாவில் யூஎஸ்பி, ஆக்ஸ், சிடி ஆதரவு , ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் , ஸ்டீயரிங் வீல் கவர் , டோர் சில் கார்டு மற்றும் ஆம்பியன்ட் லைட்னிங் வசதி சேர்க்கப்பட்டு கருப்பு கலந்த சில்வர் மற்றும் சிவப்பு கலந்த நீளம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

மேலும் சமூக வலைதளங்களில் #DrivenbyPassion என்கின்ற பெயரில் எம். எஸ் தோனி படத்துக்கான ப்ரமோவை மாருதி சுஸூகி தொடங்கியுள்ளது.