இந்தியாவில் 2018 ஜாகுவார் F-Type SVR விற்பனைக்கு வெளியானது

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் SVO (Special Vehicle Operations) பிரிவின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய 2018 ஜாகுவார் F-Type SVR மாடல் ₹ 2.65 கோடி விலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜாகுவார் F-Type SVR

முந்தைய மாடலை விட சிறப்பான வகையில் மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளியாகியுள்ள புதிய ஜாகுவார் F-Type SVR மாடலில் இலகு எடை மேக்னிசியம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் இருக்கையின் வாயிலாக 8 கிலோ வரை எடை குறைந்துள்ளது. மேலும் புகைப்போக்கி மூலம் 16 கிலோ மற்றும் 20 அங்குல அலாய் வீல் வாயிலாக 13.8 கிலோ என மொத்தமாக 37.8 கிலோ வரை எடை குறைக்கப்பட்டுள்ளது.

567 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 5 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 ப்ட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 700 என்எம் இழுவைத் திறனை வெளிப்படுத்துகின்றது.  F-Type SVR மாடல் 0 -100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.7 விநாடிகள் எடுத்துக் கொள்ளும். இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 322 கிமீ ஆகும்.

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஸ்பெஷல் வெய்கிள் ஆப்ரேஷன் பிரிவினால் உருவாக்கப்பட்டுள்ள புதிய  F-Type SVR மாடல் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் ஸ்டைலிஷ் அம்சங்களை கொண்டதாக கூபே மற்றும் கன்வெர்டிபிள் ரகத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்தியாவில் உள்ள இந்நிறுவனத்தின் 27 டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

ஜாகுவார் F-Type SVR விலை  ₹ 2.65 கோடி (Coupe) மற்றும் ஜாகுவார் F-Type SVR விலை  ₹ 2.80 கோடி (Convertible) (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)