ஹூண்டாய் க்ரெட்டா ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு வந்தது

0

எஸ்யூவி ரக சந்தையில் சிறப்பான இடத்தினை பிடித்துள்ள ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரின் முதல் வருட கொண்டாட்டத்தை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள க்ரெட்டா ஸ்பெஷல் ஆனிவர்சரி எடிசன் விலை மற்றும் கூடுதலாக 3 வேரியண்ட்கள் இணைக்கப்பட்டுள்ளது.

hyundai-creta-anniversary-edition

Google News

கடந்த சில  வாரங்களுக்கு முன்னதாக சாய்னா நேவால் அவர்களுக்கு முதல் காரினை பரிசாக வழங்கி ஹூண்டாய் தற்பொழுது க்ரெட்டா ஸ்பெஷல் எடிசன் விலையை வெளியிட்டுள்ளது. E+ பெட்ரோல் வேரியண்ட் , S+ டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்  மற்றும் SX+ (SE) ஸ்பெஷல் எடிசன் கூடுதலாக புதிய எர்த் பிரவுன் நிறம் சேர்க்கப்பட்டுள்ளது.

க்ரெட்டா விலை பட்டியல்

க்ரெட்டா E+ – ரூ. 9.99 லட்சம்

க்ரெட்டா S+ AT – ரூ. 13.58 லட்சம்

க்ரெட்டா SE – ரூ.12.23 லட்சம் (ஆன்னிவர்சரி எடிசன் பெட்ரோல்)

க்ரெட்டா SE – ரூ.13.76 லட்சம் (ஆன்னிவர்சரி எடிசன் டீசல்)

(எக்ஸ்ஷோரூம் டெல்லி )

கடந்த ஒரு வருடத்தில் 1,25,000 க்ரெட்டா எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ள ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிலிருத்து சுமார் 73 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது.

hyundai-creta-anniversary-edition-dashboard

க்ரெட்டா ஆன்னிவர்சரி எடிசன் விபரம்

1.6 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என இரு இஞ்ஜின் ஆப்ஷனிலும் SX+ வேரியண்டில் கிடைக்க உள்ள ஆனிவர்சரி எடிசனில் இஞ்ஜின் மாற்றங்கள் இல்லாமல் கூடுதல் துனை கருவிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. சாதரன SX+ வேரியண்டை விட ரூ.39,000 கூடுதலான விலையில் வரவுள்ளது.

க்ரெட்டா ஸ்பெஷல் ஆன்னிவர்சரி எடிசன் வசதிகள் போலார் வெள்ளை வண்ண காரில் கருப்பு நிற மேற்கூறை  சி பில்லர் , ஸ்பாய்லர் வரை சேர்க்கப்பட்டுள்ளது. 17 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல் , ரெட் அசென்ட்ஸ் கொண்ட கருப்பு வண்ணத்தினை கொண்ட டேஸ்பொர்டு , சிவப்பு இன்சர்ட்களை பெற்ற கருப்பு வண்ணத்திலான அப்ஹோல்ஸ்ட்ரி , லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் , ஸ்கிட் பிளேட் மற்றும் பாடி கிராபிக்ஸ் போன்றவற்றை பெற்றுள்ளது.

hyundai-creta-earth-brown

க்ரெட்டா புதிய வேரியண்ட்கள்

1.6 லிட்டர் பேஸ் பெட்ரோல் வேரியண்டுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டுள்ள புதிய எக்ஸ்கூட்டிவ் வேரியண்ட் எனப்படும் E+ வேரியண்டில் 5 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் பெத்தான்கள் ,பூளூடூத் ஆதரவு , ரூஃப் ரெயில்கள் ஆட்ஜெஸ்டபிள் ஓஆர்விஎம் , எல்இடி டர்ன் இன்டிகேட்டர் மற்றும் பின்புறத்தில் ஏசி வென்ட்கள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

121 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் VTVT பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

S+ டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்டில் 126 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் CRDi பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

புதிதாக எர்த் பிரவுன் நிறத்தினை க்ரெட்டா எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

hyundai-creta-anniversary-edition-rear