ஜிஎஸ்டிக்கு பிறகு ரூ.2.17 லட்சம் விலை குறைந்த டாடா கார்கள்..!

ஜிஎஸ்டி அறிமுகத்திற்கு பிறகு பல்வேறு கார் நிறுவனங்கள் மாபெரும் விலை குறைப்பை வழங்கி வரும் நிலையில் டாடா நிறுவனம் ரூ. 3300 முதல் ரூ. 2.17 லட்சம் வரை தங்களுடைய கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்கள் விலையை குறைத்துள்ளது.

டாடா கார் விலை ஜிஎஸ்டிக்கு பிறகு

ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு பிறகு கார் மற்றும் மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் விலை குறைப்பை மேற்கொண்டு வரும் நிலையில் நமது நாட்டின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவு மாடல்களுக்கு  ரூ. 3300 முதல் ரூ. 2.17 லட்சம் வரை விலையை குறைத்துள்ளது.

டாடா நிறுவனத்தின் சஃபாரி மற்றும் ஹக்ஸா போன்ற மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ. 2.17 லட்சம் வரை விலையை குறைத்துள்ள டாடா நிறுவனம் தங்களுடைய டியாகோ மற்றும் டீகோர் போன்ற மாடல்களுக்கு ரூ. 11,000 முதல் ரூ. 60,000 வரை குறைத்திருப்பதனால் டியாகோ காரின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டியாகோ கார் 65,000 எண்ணிக்கைகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட முன்பதிவினை பெற்ற மாடலாக வலம் வருகின்ற நிலையில் ஜிஎஸ்டிக்கு பிறகு மேலும் விலை சரிந்துள்ளதால் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

க்ராஸ்ஓவர் ரக ஹெக்ஸா எம்பிவி மாடலுக்கு நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் ரூ. 2.17 லட்சம் வரை குறைந்துள்ளதால் மிக சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலை குறைப்பு மாநிலம் மற்றும் டீலர்களுக்கு டீலர் என மாறுபடும்.

Share
Published by
automobiletamilan
Topics: Tata

Recent Posts

நிசானின் மேக்னைட் டர்போ வேரியண்டின் விலை ரூ.30,000 வரை உயர்ந்தது

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நிசான் மேக்னைட் எஸ்யூவி காரின் டர்போ வேரியண்டின் விலை அதிகபட்சமாக ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி, சாதாரண…

2021/03/06

ரூ.1.28 லட்சத்தில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி விற்பனைக்கு அறிமுகம்

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட மாடலில் ரைடிங் மோட் இணைத்து விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி…

2021/03/06

ஸ்கோடா குஷாக் காரின் இன்டீரியர் டீசர் வெளியானது

இந்தியாவில் பெரும்பாலான உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்ட ஸ்கோடா ஆட்டோவின் புதிய குஷாக் எஸ்யூவி காரின் இன்டீரியர் டிசைன் படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில்…

2021/03/05

ரூ.65,926 விலையில் பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் முதன்முறையாக குறைந்த 110சிசி இன்ஜின் பெற்ற பைக் மாடலாக பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் விற்பனைக்கு ரூபாய்…

2021/03/05

குறைந்த விலை பஜாஜ் பிளாட்டினா 100 ES விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் குறைவான விலையில் கிடைக்கின்ற பஜாஜின் பிளாட்டினா 100 ES மாடல் விலை ரூ.53,920 ஆக…

2021/03/05

2021 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு வெளியானது

ரூ.3.18 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கில் பிஎஸ்-6 ஆதரவு பெற்ற இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய…

2021/03/04