டட்சன் ரெடி-கோ 1.0 லிட்டர் விரைவில் வருகை

0

ரெனால்ட் க்விட் காரின் அடிப்படையில் உருவான டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் காரில் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

datsun redi go car

Google News

டட்சன் ரெடி-கோ 1.0லி

க்விட் காரின் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட நிசான் நிறுவனத்தின் பட்ஜெட் பிராண்டு மாடலான ரெடி-கோ காரில் 0.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Datsun redi GO girile

க்விட் கார் பெற்றுள்ள 800சிசி என்ஜினே பெற்றுள்ள ரெடி-கோ காரின் ஆற்றல் 54 hp மற்றும் 72 Nm இழுவைதிறனை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது.

ரெனோ க்விட் காரில் உள்ள 67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.

இதே எஞ்சினை பெற்ற மாடலே அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இதில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளது.

ரெடி-கோ 1.0லிட்டர் காருக்கு சவாலாக க்விட் 1.0லி, ஆல்டோ கே10 , இயான் போன்ற மாடல்கள் விளங்கும்.

Datsun redi GO tailight