டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ 200 ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது

0
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200 எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ரூ.1.29 கோடி விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. லேண்ட் க்ரூஸர் பிராடோ 200 தோற்றத்தில் சில மாற்றங்களை பெற்றுள்ளது.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ 200

பிரமாண்டமான தோற்றத்துடன் விளங்கும் மிரட்டலான லேண்ட்க்ரூஸர் சொகுசு எஸ்யூவி கார் முழுமையான கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்றது.

தோற்றம்

முகப்பில் முந்தைய மாடலை விட கூடுதலான ஸ்டைலிங் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று குரோம் ஸ்லாட்க்குகள் புதுப்பிக்கப்பட்டு புதிய முகப்பு விளக்கு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ளது.

முகப்பு பம்பர் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு அகலமான காற்று உள்வாங்கி மற்றும் பனி விளக்குகள் அறையை சுற்று குரோம் பட்டைகளை பெற்றுள்ளது. மேலும் பானெட் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் பெரிதான மாற்றங்கள் இல்லை. பின்புறத்தில் புதிய டெயில் விளக்குகள் மற்றும் குரோம் பட்டை இருபக்க டெயில் விளக்குகளையும் இணைத்து லேண்ட்க்ரூஸர் என பொறிக்கப்பட்டுள்ளது.

உட்புறம்

டேஸ்போர்டு மற்றும் சென்ட்ரல் கன்சோல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் கன்சோலில் அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் புதிய  இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , ஸ்டீயரிங் வீல்  போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ 200

என்ஜின்

முந்தை என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை .லேண்ட்க்ரூஸர் பிராடோ 200 எஸ்யூவி காரில் 281பிஹெச்பி மற்றும் 680என்எம் டார்க் வெளிப்படுத்தும் வி8 4.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முழுநேர ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனில் வந்துள்ள டொயோடா லேண்ட்க்ரூஸர் பிராடோ 200 எஸ்யூவி காருக்கு 3 வருடம் அல்லது 100000 கிமீ வரை வாரண்டி பெற இயலும்.

டொயோட்டா லேண்ட்க்ரூஸர் பிராடோ 200 கார் விலை ரூ.1,29,01,326 (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ 200
Toyota Land Cruiser 200 Facelift Launched In India