நிசான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு வந்தது

உலக புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் கார் மாடலான நிசான் ஜிடி-ஆர் கார் ரூ.1.99 கோடி விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காட்ஸில்லா காரில் 570 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

2017-nissan-gt-r

காட்ஸில்லா என்ற அழைக்கப்படும் ஜிடி-ஆர் முதன்முறையாக இந்தியாவில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 6வது தலைமுறை ஜிடி-ஆர் கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.  2+2 இருக்கை ஆப்ஷனில் கிடைக்க உள்ளது.

மேம்படுத்தப்பட்ட 2017 நிசான் ஜிடி ஆர் முந்தைய மாடலை விட 20 பிஹெச்பி கூடுதலாக மேம்படுத்தப்பட்ட புதிய 3.8 லிட்டர் வி6 ட்வீன் டர்போ பெட்ரோல் எஞ்சின் 570 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 637 நியூட்டன் மீட்டர் ஆகும். பவரை நான்கு வீல்களுக்கும் எடுத்து செல்ல 6 வேக டியூவல் கிளட்ச் கியர்பாக்சினை பெற்றுள்ளது.

நிசான் ஜிடி-ஆர் கார் அதிகபட்சமாக மணிக்கு 315 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறனை பெற்றுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை மூன்று நொடிகளில் எட்டும் இயல்பினை கொண்டதாகும்.

2017-nissan-gt-r-dashboard

உட்புறத்தில் மிக நேர்த்தியான கருப்பு , சிவப்பு மற்றும் ஐவரி போன்ற நிறங்களில் அமைந்த வண்ணதை பெற்று பல வசதிகளை கொண்ட ஸ்டீயரிங் வீல் , புதிய 8.0 இஞ்ச் தொடுதிரை அமைப்பினை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவற்றை பெற்றுள்ளது.

நிசான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் கார் விலை ரூ.1.99 கோடி (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

2017 நிசான் ஜிடி-ஆர் கார் படங்கள்

Recommended For You