நிசான் டீலர்களே டட்சன் கார் விற்பனை

0
நிசான் நிறுவனத்தின் குறைந்த விலை கார்களின் பிராண்டான டட்சன் கார்கள் நிசான் டீலர்ஷிப்புகள் வழியாகவே விற்பனை செய்யப்படும் என டட்சன் தலைவர் வின்சென்ட் கோபி தெரிவித்துள்ளார்.

ட்டசன் கோ கார்

இதற்க்கென தனியான டீலர்களை அமைக்கும் எண்ணம் இல்லை, தற்பொழுது உள்ள டீலர்களை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. நிசான் டட்சன் பிராண்டில் கோ ஹேட்ச்பேக், கோ+ எம்பிவி மற்றும் கோ காரினை அடிப்படையாக கொண்ட செடான் காரும் விற்பனைக்கு வரவுள்ளது.

வருகிற 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டட்சன் கோ கார் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.