நிசான் டெரானோ அறிமுகம்

0
நிசான் டெரானோ எஸ்யூவி மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனோ டஸ்டர் காரினை அடிப்படையாக கொண்ட டெரானோ வரும் செப்டம்பர் முதல் முன்பதிவு தொடங்குகின்றது.  வரும் அக்டோபர் முதல் விற்பனைக்கு வரலாம்.

நிசான் டெரானோ

டஸ்டரின் முகப்பில் இருந்து விடுபட்டுள்ள டெரானோ உட்புற கட்டமைப்பிலும் சில மாற்றங்களை கொண்டுள்ளது. மர வேலைபாடுகளை கொண்ட சென்டரல் கன்சோல் போன்றவை தந்துள்ளனர்.

6 விதமான வண்ணங்களில் டெரானோ கிடைக்கும். அவை சிவப்பு, சாம்பல், சில்வர், கருப்பு, வெள்ளை மற்றும் புரோன்ஸ் போன்ற வண்ணங்களில் கிடைக்கும்.

1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 101பிஎஸ் ஆற்றல் மற்றும் டார்க் 145என்எம் ஆகும்.

1.5 லிட்டர் கே9கே டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 85பிஎஸ் ஆற்றல் மற்றும் 200என்எம் டார்க் ஆகும். மற்றொன்று 110பிஎஸ் மற்றும் 248என்எம் டார்க் ஆகும்.

நிசான் டெரானோ விலை ஏறத்தாழ ரூ.10 லட்சத்திற்க்குள இருக்கலாம். டஸ்டரை விட ரூ.70000 வரை கூடுதலாக இருக்கும்.

நிசான் டெரானோ