புதிய எலன்ட்ரா டீசர் வெளியீடு – ஆகஸ்ட் 23 முதல்

வருகின்ற ஆகஸ்ட் 23ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள புதிய எலன்ட்ரா செடான் காரின் டீசர் படத்தை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. 2016 ஹூண்டாய் எலன்ட்ரா முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் சிறப்பாக அமைந்துள்ளது.

ஃபூளூடியக் 2.0 டிசைன் தாத்பரியங்களை அடிப்படையாக கொண்ட 2016 ஹூண்டாய் எலன்ட்ரா காரில் புதிய அறுங்கோண  கிரில் , முன்பக்க பம்பரில்  பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் , நேர்த்தியான டைனமிக் பென்டிங் ஹெட்லைட் பெற்று பக்கவாட்டில் புதிய அலாய் வீல் , பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகள் போன்றவற்றுடன்  நேர்த்தியாக விளங்குகின்றது.

முந்தைய தலைமுறை மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் பிரிமியம் தோற்ற அமைப்பில் பல நவீன வசதிகளுடன் 7 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பில் ஆண்ட்ராய்டு ஆட்டோ , ஆப்பிள் கார் பிளே , கார் நேவிகேஷன் யூஎஸ்பி ,பூளூடூத் ,பல வசதிகளை கட்டுப்படுத்த ஸ்டீயரிங் வீலில் பொத்தான்கள் , க்ரூஸ் கன்ட்ரோல் என பல வசதிகளை பெற்றிருக்கும்.

2017-hyundai-elantra
ஹூண்டாய் எலன்ட்ரா விலை ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சத்தில் அமையலாம். எலன்ட்ரா போட்டியாளர்கள்  செவர்லே க்ரூஸ் , கரோல்லா அல்டிஸ் , ஸ்கோடா ஆக்டாவியா மற்றும் ரெனோ ஃபுளூயின்ஸ் போன்ற மாடல்களாகும்.