புதிய நிசான் மைக்ரா சிவிடி விற்பனைக்கு வந்தது

வருகின்ற பண்டிகை காலத்தை ஒட்டி நிசான் மைக்ரா சிவிடி காரில் புதிய ஆரஞ்சு நிற வண்ணத்துடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மைக்ரா மற்றும் மைக்ரா ஏக்டிவ் என இரு வேரியண்டிலும் சன் ஷைன் ஆரஞ்சு நிறம் கிடைக்கும்.

 

இந்தியாவிலிருந்து 100க்கு மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்ற நிசான் மைக்ரா காரில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வண்ணத்துடன் ஐரோப்பியா கார்களில் உள்ளதை போன்ற கருப்பு வண்ண இன்டிரியரை பெற்றுள்ளது.

புதிய ஆரஞ்சு வண்ணத்துடன் முந்தைய வண்ணங்களான சிவப்பு , வெள்ளை , நீலம் , கருப்பு மற்றும் சில்வர் என மொத்தம் 6 வண்ணங்களில் கிடைக்கும். தோறத்தில் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஆரஞ்சு வண்ண காரின் உட்புறத்தில் கருப்பு வண்ண ஸ்போர்ட்டிவ் இண்டிரியரை கொண்டுள்ளது.

பவரில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 76bhp பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் மட்டுமே கிடைக்கும். நிசான் மைக்ரா சிவிடி மைலேஜ் லிட்டருக்கு 19.34 கிலோமீட்டர் ஆகும்.  63bhp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கும். மைக்ரா டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 23.04 கிலோமீட்டர் ஆகும்.

 

இந்தியா முழுவதும் உள்ள 232 டீலர்களிடமும் நிசான் மைக்ரா மற்றும் மைக்ரா ஏக்டிவ் கார்கள் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

ரூ.4.55 லட்சத்தில் நிசான் மைக்ரா விலை தொடங்குகின்றது. ரூ.5.99 லட்சத்தில் நிசான் மைக்ரா சிவிடி கிடைக்கின்றது. (எக்ஸ்ஷோரூம் டெல்லி)