புதிய ஹோண்டா சிட்டி கார் அறிமுகம்

0
புதிய ஹோண்டா சிட்டி கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4வது தலைமுறை ஹோண்டா சிட்டி புதுவிதமான வடிவ மொழியில் சிட்டி கார் வெளிவந்துள்ளது.

ஹோண்டா சிட்டி கார்
பெட்ரோல் என்ஜினில் மட்டும் விற்பனையில் இருந்து வந்த சிட்டி கார் அமேஸ் காரில் பொருத்தப்பட்டிருந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் சிட்டி காரில் 110பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய என்ஜினாக ஆற்றல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 வேக மெனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 118பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும். பெட்ரோல் வகையில் 5 வேக ஆட்டோ மற்றும் மெனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
honda+city+launch
முந்தைய சிட்டி காரை விட மிக சிறப்பான வடிவத்தினை புதிய சிட்டி கார் பெற்றுள்ளது. முந்தைய நீளமான 4440மிமீ நீளத்தினை கொண்டுள்ளது. வீல் பேஸ் 50மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது இதனால் கூடுதலான இடவசதியினை பெற முடியும்.
புதுவிதமான வடிவமைப்பில் ஆண்டனா, 8 ஸ்பீக்கர்கள், கண்ணாடி கூரை யூஎஸ்பி போர்ட், ஐபாட் தொடர்பு என பல வசதிகளை கொண்டிருக்கும்.
அடுத்த வருட தொடக்க முதல் ஷோரூம்களில் விற்பனைக்கு வரும். புதிய ஹோண்டா சிட்டி ரூ.9 லட்ச்சத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹோண்டா சிட்டி கார்