மாருதியின் புதிய வேகன் ஆர் VXi+ வேரியன்ட் அறிமுகம்

மாருதி வேகன் ஆர் காரில் கூடுதலாக உயர் ரக வேரியன்ட் மாடலாக புதிய வேகன் ஆர் VXi+ ரூ. 4.70 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் வசதிகளுடன் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை.

சமீபத்தில் வேகன் ஆர் ரீஃபிரேஷ் மாடல் விபரங்கள் வெளிவந்ததை தொடர்ந்து விற்பனைக்கு வந்துள்ள VXi+ வேரியன்டில் VXi+, VXi+(O), VXi+ AGS மற்றும் VXi+ (O) AGS என நான்கு விதமான பிரிவுகளில் வந்துள்ளது.

புதிய வேரியன்டில் புதிய முன்பக்க கிரில் , புராஜெக்டர் முகப்பு விளக்குகள் , அலாய் வீல் , சைட் ஸ்க்ர்ட் மற்றும் உட்புறத்தில் இரு வண்ண கலவையிலான டேஸ்போர்ட் மற்றும் பிரிமியம் ஃபேபரிக் இருக்கைகளை பெற்றுள்ளது.  ஆப்ஷனல் வேரியன்டில் இரு காற்றுப்பை மற்றும் ஏபிஎஸ் வசதிகள் கிடைக்கும்.

எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 1.0 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

Maruti Wagon R side view

புதிய வேகன்ஆர் விலை பட்டியல்

முந்தைய டாப் வேரியன்டை விட சராசரியாக ரூ.30,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது. வேகன்ஆர் கார் விலை டெல்லி எக்ஸ்ஷோரூம் ஆகும்.

வேகன்ஆர் வேரியன்ட்

விலை விபரம்

 VXi+  ரூ. 4,69,840
 VXi+ (O) ரூ. 4,89,072
VXi+ AGS ரூ. 5,17,253
VXi+ AGS (O) ரூ.5,36,486