மாருதி இக்னிஸ் காரின் டீஸர் வெளியீடு

0

வருகின்ற 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி இக்னிஸ் மினி எஸ்யூவி காரின் டீஸரை மாருதி சுஸூகி நெக்ஸா வெளியிட்டுள்ளது. மாருதி நெக்ஸா வழியாக விற்பனைக்கு வரவுள்ள மூன்றாவது காராகும்.

2016 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வாயிலாக இந்தியாவில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து தீபாவளி பண்டிகை காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட இக்னிஸ் உற்பத்தி சூழல்கள் காரணமாக காலதாமதமாக விற்பனைக்கு வருகின்றது.

Google News

வித்தியாசமான ஜப்பான் டிசைன் வடிவ தாத்பரியத்தில் பாக்ஸ் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் எஸ்யுவி தாத்பரியங்களை கொண்டு மாருதியின் மற்ற கார்களிலிருந்து வித்தியசமான ஸ்டைலிங் அம்சத்தை பெற்ற மாடலாக கவர்ச்சியாக விளங்குகின்றது. முகப்பில் சதுர வடிவிலான ஹெட்லேம்ப் அதனுடன் இணைந்த U வடிவ பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்கு போன்றவற்றுடன் விளங்குகின்றது.

இன்டிரியரில் சிறப்பான இடவசதி கொண்டதாக எதிர்பார்க்கப்படுகின்ற இக்னிஸ் காரில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , இருவண்ண கலவையில் டேஸ்போர்டு , புதிய ஸ்டீயரிங் வீல் போன்றவை பெற்றிருக்கும்.

இக்னிஸ் என்ஜின்

4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் சியூவி வகையான பிரிவு வாகனமாக வரவுள்ள காரில் மாருதியின் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் பெட்ரோல் மாடலில் சிவிடி அல்லது ஏஎம்டி ஆப்ஷனலாக கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வருகின்ற ஜனவரி 13ந் தேதி விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.